’’நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்ற தலைப்பில் தம்பிகள், தங்கைகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் உரையாடுகிறேன்! - Agnipuratchi

’’நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்ற தலைப்பில் தம்பிகள், தங்கைகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் உரையாடுகிறேன்!

Share This

’’நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்ற தலைப்பில் தம்பிகள், தங்கைகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் உரையாடுகிறேன்!

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? என்பது குறித்து தம்பிகள், தங்கைகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன்  இணையவழியில் தொடர்ந்து உரையாடி வருகிறேன்.

கடந்த நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற இணையவழி உரையாடல்,  திசம்பர் 10-ஆம் தேதி இணையவழியில் நடைபெற்ற ’’உன்னையே நீ அறிவாய்” என்ற தலைப்பிலான உரையாடல் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் ஏன்? என்பது குறித்த விழிப்புணர்வு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக ’’நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்ற தலைப்பில்  உங்களுடன் உரையாட உள்ளேன். அடுத்த வாரத்தில் ஒருநாள் இந்த உரையாடல் நடைபெறும்.  தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். உரையாடலுக்கு இப்போதிலிருந்தே தயாராகுங்கள்!

டுவிட்டர் பதிவு

கிரேக்க தத்துவஞானி சாக்ரடீசின்  ’’உன்னையே நீ அறிவாய்” என்ற தத்துவம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டது. அது இன்றைக்கும் பொருத்தமாக உள்ளது. இன்றைக்கு மட்டுமல்ல.... இன்னும் 2500 ஆண்டுகள் கழித்தும் கூட ஒவ்வொரு மனிதனுக்கும் இது பொருந்துவதாக இருக்கும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages