அதிமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரை:
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உரை:
மக்களுக்கு உணவு, உடை, உறைவிடத்தை தருபவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்கள்.
அதிமுக அரசு உணவு, உடை, உறைவிடத்தை வழங்கி சிறந்த ஆட்சியைத் தருகிறது.
அதிமுகவில் சாதாரண தொண்டராக இருப்பதுகூட மிகவும் பெருமைக்குரியது.
கல்வி, உணவு உற்பத்தி, தொழில்துறை என பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மத்திய அரசில் அங்கம் வகிக்காதபோதும், அதிமுக திட்டங்களை பெற்றுத் தருகிறது.
மதுரையில் எய்ம்ஸ், 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பெற்றுத் தந்துள்ளோம்.
தமிழகத்திற்கு நலத்திட்டங்களை பெறும் நோக்கத்துடனேயே மத்திய அரசுக்கு ஆதரவு.
அதிமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உரை:
தமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே கட்சி அதிமுக.
அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறையிலும் முதலிடத்தில் உள்ளது.
அதிமுக ஆட்சியை விமர்சிப்பவர்கள், அவர்களது வீட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்கான ஆட்சியைத் தந்தவர்கள்.
அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்.
பல்வேறு சோதனைகளை சந்தித்து வளர்ந்த இயக்கம் அதிமுக.
சில புல்லுருவிகள் அதிமுகவை உடைக்க நினைத்தனர் - அவர்களது முயற்சி தவிடுபொடியாக்கப்பட்டது.
ஒற்றுமையின் மூலம் எதையும் வெல்லும் சக்தி அதிமுகவிற்கு உள்ளது.
இந்தியாவிலேயே தொண்டர் முதலமைச்சராக வரக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான்.
எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்ஜிஆர் பெயர் உள்ளது.
பிரிந்த பின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அதிமுக தான்.
அதிமுகவில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பதவி நிச்சயம்.
No comments:
Post a Comment