பெரியவர் ஆனைமுத்து அவர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு இல்லை- மருத்துவர் இராமதாசு அய்யா
மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான பெரியவர் வே.ஆனைமுத்து அய்யா அவர்கள் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை. அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். வயது முதுமை காரணமாக சத்துக்குறைவால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். சத்துக்குறைவு சரியான உடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். பெரியவர் ஆனைமுத்து அவர்கள் உடல் வலிமை பெற்று விரைவில் வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment