அக்னிப்புரட்சி இன்றைய (01.01.2021) முக்கிய செய்திகள்.
* அமைதியாக பிறந்தது 2021, அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:
மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறி வருகிறார்கள்.
சாலைகளில் கொண்டாட்டங்கள் இல்லாத புத்தாண்டாக 2021 அமைந்துள்ளது.
வீடுகளில் அமைதியான முறையில் மக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
வானவேடிக்கைகளுடனும், வண்ண விளக்குகளுடன் புத்தாண்டை மக்கள் வரவேற்கிறார்கள்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடும் ரூ.1,264 கோடியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.
ரூ.2 ஆயிரம் கோடியில் 85% நிதித்தொகையை ஜப்பான் ஜைக்கா நிறுவனம் கடன் உதவியாக அளிக்கிறது.
* கர்நாடகாவில் 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்.
* 7.5% இடஒதுக்கீடு - ஜன.4ல் 2ஆம் கட்ட மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு:
ஜனவரி 4 ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது; ஜனவரி 5ம் தேதி முதல் மருத்துவ படிப்புகளுக்கான பொதுக்கலந்தாய்வு நடக்கிறது.
* 3 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருமா?இன்று மீண்டும் ஆய்வு செய்கிறது, நிபுணர் குழு.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது, கோவேக்சின்.
சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது கோவிஷீல்டு.
ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி.
அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி
அளிக்குமாறு 3 நிறுவனங்கள் கோரிக்கை.
* முதல்வர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் :
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம்.
* இந்தியாவில் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழகம் முழுவதும் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்த நடவடிக்கை -தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி.
தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உருமாறிய கொரோனோவால் நோய் பரவல் மற்றும் இறப்பு விகிதம் மாறுபடவில்லை.
தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது - ராதாகிருஷ்ணன்.
* தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலாளர் அந்தஸ்துக்கு நிலை உயர்வு!
சத்யபிரதா சாகு, பீலா ராஜேஷ், கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு நிலை உயர்வு அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு!
* இந்தியாவில் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சென்னை, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தாலா, லக்னோவில் வீட்டு வசதி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு.
* பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி பேச்சு:
சென்னை பெரும்பாக்கத்தில் 1,000 வீடுகள் கட்டப்பட உள்ளது.
2023-ம் ஆண்டுக்குள் தமிழகம், குடிசைகள் இல்லா மாநிலமாக மாற்றப்படும்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் செயல்படாமல் முடங்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
துணை முதலமைச்சரே விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல் இருப்பது இந்த ஆணையத்தை ஏன் அமைத்தார் என்ற கேள்வியை எழுப்புகிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இதர டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் சேர்ப்பு.
காயம் காரணமாக உமேஷ் யாதவ் விலகிய நிலையில் இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு.
* சென்னையில் வரும் 6ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி பங்கேற்கிறார்.
மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
* கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி; 50% இருக்கைகள், முகக்கவசம், தனி மனித இடைவெளி என கட்டுப்பாடுகள் விதிப்பு.
* இண்டேன் நிறுவன சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிலிண்டர் முன்பதிவு, புதிய இணைப்புகளுக்கு 84549 55555 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் தரலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
* ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து 8-ஆம் நாள் : ஶ்ரீ நம்பெருமாள் தங்க குதிரையில் எழுந்தருளி வேடுபறி உற்சவத்தில் வையாளி கண்டருளினார்.
*:இந்தியாவில் வரும் 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவை தொடங்கப்படும்.
டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும்.
ஜன. 23 ஆம் தேதி வரை வாரத்திற்கு 15 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் - மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.
No comments:
Post a Comment