அக்னிப்புரட்சி இன்றைய (04.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.01.2021) முக்கிய செய்திகள்.

* பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.86.51க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.79.21க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே இன்று ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி அருகே விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 40வது நாளை எட்டியுள்ளது.

கடும் குளிர், மழைக்கு இடையே இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது.

இதனிடையே, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்கின்றனர். 

இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகத்தீர்வு காணப்படும் என நம்புவதாக வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாகவும், இன்றைய பேச்சுவார்த்தையில் இடம்பெறும் அம்சங்கள் பற்றியும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் தோமர் விவாதித்தார்.

* புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு.

* தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என மாணவர்கள், பெற்றோர்களிடம் இன்று முதல், இந்த வாரம் இறுதி வரை கருத்துக்கேட்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்.

* கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ஓசூர் - பெங்களூரு இடையேயான பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்.

* ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பிசிசிஐ தகவல்.

மெல்போர்னில் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிசப் பண்ட் ஆகியோர் ஓட்டலுக்கு சென்றதை அடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ம் தேதி சென்னை வர திட்டம்.

நடிகர் ரஜினிகாந்திடம் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்கிறார்.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு.

* உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு:

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தின் 31ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் பானர்ஜி.

* திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் ரூ.29.06 கோடி உண்டியல் காணிக்கை வசூல்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி முதல் நேற்று வரை 4.25 லட்சம் பேர் சாமி தரிசனம்.

* மு.க.அழகிரி குடும்ப பிரச்சனையை பற்றி பேசியிருக்கிறார். அனைவரும் பேசக்கூடிய அளவுக்கான அரசியல் விவகாரம் அல்ல -திருமாவளவன்.

* தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகை விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

ரூ.2500 உடன் துணிப்பையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கப்படுகிறது.
தினசரி 200 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுப்படுகிறது.

குடும்பத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் ரேசன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கலாம்.

* டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் 60 பேர் மரணம்.

கடுமையான குளிரை தாங்க முடியாமல் 60 விவசாயிகள் உயிரிழப்பு.

விவசாயிகள் மரணம் குறித்து பாரதிய கிஷான் சங்கம் அறிவிப்பு.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 40 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

6 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில் இன்று 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது.

* திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி:

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

நடிகர் விஜய் மற்றும் சிம்பு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தநிலையில், திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையையும் ஏற்று 100% இருக்கைகளுக்கு அனுமதி.

* ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு தேதி வரும் ஜனவரி 7ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்- மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

* தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.

* இங்கிலாந்தில், ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி முதல் முறையாக 82 வயது நபருக்கு செலுத்தப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள சர்ச்சில் மருத்துவமனையில், பிரையன் பிங்கர் என்ற நீரிழிவு நோயாளிக்கு செலுத்தப்பட்டது.

* அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கேள்வி.

அரசியல் சண்டையை அரசியல் ரீதியில் சந்திக்க வேண்டும் - சஞ்ஜிப் பானர்ஜி.

பதவியேற்ற முதல் நாளில், முதல் வழக்கில் அதிரடி கேள்வி எழுப்பிய சஞ்ஜிப் பானர்ஜி.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.536 உயர்ந்து ரூ.38,520க்கு விற்பனை.
கிராமுக்கு ரூ.67 உயர்ந்து ரூ.4,815க்கு விற்பனை.

* டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்கும் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கலாசார பிணைப்புகளை மேம்படுத்தவும், தமிழ் பாரம்பரியத்தை வெளிக்காட்டவும் இது உதவும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவை பொறுத்தவரை எங்கள் நிலைப்பாடு மாறாது.

அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி - அமைச்சர் ஜெயக்குமார்.

* முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு நெல்லை கோவிந்தபேரியில் மணிமண்டபம்.

முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

* ஆட்சியில் இருக்கக் கூடிய அவலங்களை எடுத்து சொல்லுகிறோம்; இதனால் கிராம சபை கூட்டத்திற்கு தடை போட்டார்கள் - கடலூர் பாதிரிக்குப்பத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

* வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்ய கோரி நடந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைத்த நிலையில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் வருகிற 8-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு .

* ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி நிலுவை எவ்வளவு? பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்கிய தமிழக அரசு, அந்த இடத்திற்கு 29.3 கோடி ரூபாயும், கட்டிடத்திற்கு 2.7 கோடி ரூபாய் என 32 கோடி ரூபாயை தீபா, தீபக் தரப்புக்கு தரவும், 36.9 கோடி ரூபாய் வரி பாக்கியை வருமான வரித்துறைக்கு தரவும் நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி உள்ளிட்ட விவரங்களை தங்கள் தரப்புக்கு வழங்க கோரி தீபக் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

* புதுச்சேரியில் ஜனவரி 6-ம் தேதி முதல் தொழில்நுட்பக் கல்லூரிகளை திறக்க உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசின் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை பின்னப்பறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

* ரஜினியின் முடிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் : ரஜினி மக்கள் மன்றம்.

ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்

ரஜினியின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது- ரஜினி மக்கள் மன்றம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages