அக்னிப்புரட்சி இன்றைய (05.01.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* பூம்புகார் இனி காவிரிப்பூம்பட்டினம்!
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள கீழையூர் (பூம்புகார்) சிற்றூருக்கு சங்ககால பெயரான காவிரிப்பூம்பட்டினம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!
* கேரள கோழிகள் தமிழகம் வர தடை:
பறவைக் காய்ச்சலால் கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடைவிதிப்பு.
கேரளாவின் ஆலப்புழா, கோட்டயத்தில் பரவிய பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை.
கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களை திருப்பியனுப்பவும் உத்தரவு.
கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் கால்நடைத்துறை இயக்குநர் உத்தரவு.
* திமுக எம்.பி., கனிமொழி தனது 53 ஆவது பிறந்தநாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.
* சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் மைதானத்தை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு.
பொங்கலுக்கு பிறகு 10,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது பற்றி முடிவு செய்ய நேரில் ஆய்வு என தகவல்.
பெற்றோரின் கருத்தை கேட்டறிந்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்.
* வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மதம்.
தேர்தல் தொடர்பான பிற அமைப்புகளுடன் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை இறுதி செய்ய வேண்டும்- மத்திய அரசு.
* கொச்சி-மங்களூரு இடையே குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
டெல்லியில் இருந்து காணொலி மூலம் 450 கி.மீ. வரை குழாய்வழி கேஸ் இணைப்பை தொடங்கி வைக்கிறார்
ஒரே நாடு, ஒரே கேஸ் விநியோக அமைப்பு நோக்கத்தில் ரூ.3,000 கோடியிலான திட்டம் இன்று தொடக்கம்
* தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.
இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்த்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
* புதிய நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.
டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூசி பரவலை தடுக்க கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை.
* செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முதற்கட்டமாக 500 கனஅடி உபரி நீர் பிற்பகலில் வெளியேற்றப்பட உள்ளது.
உபரிநீர் திறப்பின் காரணமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* கொச்சி - மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 450 கி.மீ தொலைவிற்கு கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை இத்திட்டம் இணைக்கிறது.
* மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர்களை நியமிக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு.
வழக்கு விசாரணை முடியும் வரை மினிகிளினுக்குகளுக்கு மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மினி கிளினுக்குகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனத்தில் தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
* இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க கோருவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் போது மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
கோரிக்கை பரிசீலித்து 2 வாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* சீன போலி செயலி விவகாரம் - சட்டவிரோதமாக 1600 சிம் கார்டுகள் வாங்கியது அம்பலம்:
சென்னை, பெங்களூருவில் உள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 500 சிம் கார்டுகள் பெறப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல்.
கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு வழங்க உள்ளதாக கூறி, செல்போன் நிறுவனங்களிடம் சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன.
“சிம் கார்டுகளை வாங்கிய நிறுவனம், சீன போலி செயலி பயன்பாட்டுக்கு சட்டவிரோதமாக கொடுத்துள்ளது"
* தமிழகம் முழுவதும் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு.
* மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மோசடி வழக்கில் கைது.
மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி என புகார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
கைது செய்யப்பட்ட ஹேம்நாத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.
* மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு:
இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது - உயர்நீதிமன்றம்.
மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை-சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
தமிழக அரசு பதிலளிக்க 15 நாள் அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
* இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியா வருகை ரத்து:
குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக ஏற்கனவே போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால், ஜான்சன் வருகை ரத்து என தகவல்.
* எம்.பி. - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்- சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு.
* தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது-தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் - தலைமை நீதிபதி அமர்வு வேதனை.
* இந்தியாவில் வரும் 13-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.
* பேட்டிங் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் கேஎல் ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்காக
மெல்போர்ன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கேஎல் ராகுலுக்கு இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
* பள்ளிகள் திறப்பது குறித்து நாளையே கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
10,11,12 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பொது தேர்வுகளை எதிர்கொள்ள பள்ளிகளை திறக்க திட்டம்.
ஏழாம் தேதி மாலை 5 மணிக்குள் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவு. அதனால் நாளையும், நாளை மறுதினமும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெறுகின்றன.
No comments:
Post a Comment