அக்னிப்புரட்சி இன்றைய (07.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.01.2021) முக்கிய செய்திகள்.

Share This


அக்னிப்புரட்சி இன்றைய (07.01.2021) முக்கிய செய்திகள்.

* இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.86.96 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.79.72 க்கு விற்பனை.

* கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு- பள்ளிக் கல்வித்துறை.

* ஜோ பிடன் தேர்தல் வெற்றியை தடுக்க டிரம்ப் விடுத்த கோரிக்கையை துணை அதிபர் மைக் பென்ஸ் ஏற்க மறுப்பு.

அரசியல்சாசனத்தின்படிதான் செயல்படுவேன் என்று மைக் பென்ஸ் அறிவித்ததால் டிரம்ப் அதிர்ச்சி.

* அமெரிக்க கேபிட்டல் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள்.

டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக போராடியவர்கள் கேபிட்டல் கட்டிடத்திற்குள் புகுந்தனர்.

துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் பல செனட்டர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கேபிடல் பில்டிங் பூட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி கேபிட்டல் கட்டட வளாகத்திற்குள் நுழைந்த போது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார்.

6 மணி நேரமாக நீடித்த அமெரிக்க நாடாளுமன்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

பிடனை வெற்றியாளராக அறிவிக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கியது.

பிடன் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக தங்கள் வாக்குகளை தேர்தல் சபை உறுப்பினர்கள் டிச.14 இல் நிகழ்ந்தது. வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

* பறவை காய்ச்சல் பரவலையடுத்து முட்டை விலை குறைந்துள்ளது.
நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து, ரூ.4.85 ஆக நிர்ணயம்.

* சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை தகர்க்க அனுமதிக்க முடியாது:

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி கருத்து.

வாஷிங்டனில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் மன உளைச்சல் அளிக்கிறது - பிரதமர் மோடி.

* அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

மதுரையில் வாடிவாசல் பகுதிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் உதயகுமார் பேட்டி.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - அமைச்சர் உதயகுமார்.

* வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் முகநூல் கணக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு முடக்கம்.

டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை தொடர்ந்து முகநூல் கணக்கும் முடக்கம்.

* திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிரான மனு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு:

வழக்கறிஞர் பிரபு நேற்று மனு தாக்கல் உடனடியாக விசாரணை தேவை என
இன்று கோரிக்கை.

உடனடியாக விசாரிக்க கோரிக்கை விடுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

வழக்கறிஞர் பிரபுவின் கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு.

* மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை தமிழகம் வருகை.

கொரோனா தடுப்பூசி தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பிற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

குமரிக்கடல் முதல் வடதமிழக பகுதிகள் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்று காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பைடன் வெற்றி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பைடன் வெற்றி.

306 வாக்குகள் பெற்று அதிபராக தேர்வானார் பைடன். வருகிற 20ம் தேதி 46வது அதிபராக பதவியேற்கிறார் பைடன்.

* வயது முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அனுமதிக்கு தடை கோரிய வழக்கு.

தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவு.

தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் உயர் நீதிமன்றம் மறுப்பு.

* இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி : முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக புகோவ்ஸ்கி 62, மார்னஸ் 67 ரன்களும் எடுத்தனர்.

* “ஊழல் புகார் பற்றி விவாதிக்க நான் ரெடி, நீங்கள் ரெடியா?" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சவால்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சவாலை ஏற்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநர் அனுமதி தர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு விவாதிக்க வாருங்கள்.

* பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை நிறைவு.

25,800 தன்னார்வலர்கள் பங்கேற்ற  3-ஆம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றது -பாரத் பயோடெக் நிறுவனம்.

* அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்டார் டொனால்டு டிரம்ப்.

தேர்தல் முடிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், ஜனவரி 20ல் முறைப்படி அதிகார பரிமாற்றம் நடைபெறும்.

சட்டப்பூர்வ வாக்குகளுக்கான எங்களின் போராட்டம் தொடரும் - டிரம்ப்.

* தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்.

10,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் நேரில் பயிற்றுவிக்க வேண்டியுள்ளதாக பெற்றோர்கள் கருத்து.

* லஞ்சம் பெற்ற திண்டுக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனர் முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக மனைப்பிரிக்க அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

* ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற பீட்டா அமைப்பு வலியுறுத்தல்.

போட்டிகளை நிறுத்தாவிட்டால் ஜல்லிக்கட்டால் மட்டுமன்றி கொரோனா காரணமாகவும் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக பீட்டா அமைப்பு தகவல்.

* வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு" -வருமான வரி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல்.

சசிகலா விடுதலையாக உள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க
வேண்டும் - சசிகலா தரப்பு.

சசிகலாவின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணை பிப்.4ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

* தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி:
நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி என முதற்கட்ட தகவல்.

* கடந்த ஞாயிறு அன்று நடந்த குரூப் 1 தேர்வுக்கான உத்தேச பதில்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியீடு - விடைகள் பற்றி ஆட்சேபம் இருந்தால் ஜனவரி 14க்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு.

* பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோர்களின் கருத்துகளை அரசிடம் தாக்கல் செய்தது பள்ளிக்கல்வித்துறை.

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்.

* அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கின் மீதான தடை 2 வாரங்களுக்கு நீட்டித்து பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் டிரம்ப் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages