அக்னிப்புரட்சி இன்றைய (10.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (10.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (10.01.2021) முக்கிய செய்திகள்.

* கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்.

15க்கும் மேற்பட்ட மீனவர்களை சிறைபிடித்தும் படகுகளை சேதப்படுத்தியும் தாக்கினர்.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.86.96 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.79.72 க்கு விற்பனை.

* போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய அரசு.

ஜன. 17 முதல் 3 நாட்கள் நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு.

மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு -மத்திய சுகாதார அமைச்சகம்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருத்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

* அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துக்கொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும் - முதலமைச்சர்.

அரசு கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயன்பெறுவர்.

* பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி திமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தடுத்து நிறுத்தம்.

ஈச்சனாரியில் கனிமொழியின் வாகனத்தை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

காவலர்கள் தடுத்து நிறுத்திய இடத்திலேயே சாலையில் அமர்ந்து கனிமொழி போராட்டம்.

" வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

* கொரோனா தடுப்பூசி தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.

ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் 2 கட்டமாக தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

* இனவெறி சர்ச்சையால் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3ஆவது டெஸ்ட் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 407 ரன் இலக்கு நிர்ணயம்.

* லோன் செயலி வழக்கில் கைதான சீனர்கள் குறித்த விவரம், குற்றப் பின்னணி கேட்டு கடிதம்:

டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்.

செயலி மோசடி வழக்கில் கைதான சீனர்கள் உட்பட 4 பேரிடம் விசாரித்து வருகிறது காவல்துறை.

விசா காலம் முடிந்தும் இந்தியாவில்
தங்கியிருந்ததால் அவர்களின் விவரங்களை கோருகிறது காவல்துறை.

* மாயமான விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது- இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

சனிக்கிழமை பிற்பகல் தலைநகர் ஜகார்த்தோவில் இருந்து 62 பேருடன் பறந்து உயர்ந்த இந்த விமானம் 4 நிமிடங்களில் ரேடார் தொடர்பை இழந்தது.

இந்த நிலையில் ஜாவா கடலில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தின் உடைந்த பாகங்களையும், பயணிகளின் உடல்பாகங்களையும் கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் விமானம் நொறுங்கி விழுந்ததை இந்தோனேசிய அதிபர் உறுதி செய்துள்ளார்.

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் - குமரி கடல் பகுதிக்கும் இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

* புதுச்சேரியில் 3 வது நாளாக தர்ணா போராட்டம்:

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு  திரும்பப் பெறக்கோரி புதுச்சேரியில் 3 வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமனற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

* நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ஏற்கனவே சென்னை போலீசார் 36 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது வா தலைவா வா.. இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை.. உங்கள் ஆட்சி வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை ரஜினி ரசிகர்கள் எழுப்பினர்.

ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தும் பதாகைகளையும் ரசிகர்கள் அங்கு வைத்திருந்தனர்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி : 4ம் நாள் ஆட்ட நேர முடிவில்  இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் ஒரு நாள் ஆட்டம் மிஞ்சியுள்ள நிலையில் இந்தியா வெற்றி பெற மேலும் 309 ரன்கள் தேவை.

" இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு.

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கும் வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என அறிவிப்பு.

* ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறி விமர்சன பேச்சு குறித்து இந்திய அணியிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மன்னிப்பு கோரியது.

பிரச்சனைக்கு காரணமான ரசிகர்கள் மீது நிரந்தர நுழைவுத் தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

* கடலூர்: திட்டக்குடி அருகே கல்லூரில் தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த கார் - பயணம் செய்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு; இருவர் மருத்துவமனையில் அனுமதி.

4 மாதங்களுக்குள் முடிந்தவரையில் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்று அதிமுகவினர் செயல்படுகின்றனர்.

இந்த ஆட்சியை மாற்ற மக்கள் தயாராகிவிட்டனர் - சென்னையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு.

* பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நியாயமான விசாரணையை நடத்த அரசு தயாரா? - கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்  - பொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு.

* சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் மாஸ்டர் படத்திற்கான முன்பதிவுக்கு குவிந்த ரசிகர்களால் கொரணோ பரவம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. திரையரங்கு உரிமையாளரை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

* புதுச்சேரியில் இரட்டை ஆட்சி முறை- முதர்வர் நாராயணசாமி.

புதுச்சேரியில் பாஜக துணையுடன் இரட்டை ஆட்சி முறையை நடத்தி வந்தார் கிரண்பேடி.

புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு ஆளுநர் கிரண்பேடிதான் காரணம்- முதல்வர் நாராயணசாமி.

சட்டமன்றம் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றவும், உரிமையை பறிக்கவும் மத்திய அரசு திட்டம்- நாராயணசாமி.

* கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு:

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.

ஜன.22ஆம் தேதி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்- முதல்வர் நாராயணசாமி.

ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.1 ஆம் தேதி உண்ணாவிரதம்- முதல்வர் நாராயணசாமி.

* புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக, மாநில சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம்:
                                                                          துணைநிலை ஆளுநரிடம் நிலுவையிலுள்ள 15 திட்டங்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்டசபையில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages