அக்னிப்புரட்சி இன்றைய (14.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.01.2021) முக்கிய செய்திகள்.

* உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 

புத்தாடை அணிந்து, புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு பழங்களுடன் கதிரவனுக்குப் படையலிட்டு இந்த நாளை வீடுதோறும் மக்கள் கொண்டாடுகின்றனர்.

பொங்கல் பானை பொங்குவது போல் இல்லம்தோறும் மகிழ்ச்சி பொங்கும் நன்னாளாக இது வரவேற்கப்படுகிறது.

“பொங்கலோ பொங்கல்" அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்......

* டிரம்ப்-க்கு எதிரான 2-வது இம்பீச்மென்ட் தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

அமெரிக்க வரலாற்றில் இருமுறை இம்பீச்ட்மென்ட் மூலம் பதவி நீக்கத்தை எதிர்கொண்ட முதல் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

டிரம்ப்-க்கு எதிரான இம்பீச்மென்ட் தீர்மானத்துக்கு ஆதரவாக 232 பேரும் எதிர்ப்பாக 197 பேரும் வாக்களித்தனர்.

டிரம்ப்-க்கு எதிரான இம்பீச்மென்ட் தீர்மானம்- ஜனநாயக கட்சியின் 222 எம்.பிக்களுடன் குடியரசு கட்சியின் 10 பேரும் ஆதரவு.

* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.87.40 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.80.19 க்கு விற்பனை.

* சென்னை காவல்துறையினருடன் முதல்வர் பழனிசாமி பொங்கல் கொண்டாட்டம்:

சென்னை காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

* "தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிக சிறந்த பண்டிகை"

"இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வை பெருக்கவும் நம்மை தூண்டட்டும்"

"தைத்திருநாளில் நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை பெறுவோம்" - பிரதமர் மோடி.

*  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என இதுவரை 17 பேர் காயம்.

* அவனியாபுரத்தில் ராகுல்காந்தி:

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வருகை.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை அவனியாபுரம் வந்த ராகுல் காந்தியுடன் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்பு.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - ஒரே மேடையில் அமர்ந்து கண்டுகளிக்கும் ராகுல் காந்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின்.

தமிழக மக்களையும், தமிழ் பண்பாட்டையும் காக்கும் கடமை எனக்கு உள்ளது. தமிழக மக்களோடு நான் என்றும் நிற்பேன் - ராகுல்காந்தி.

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் - ராகுல்காந்தி

மதுரை தென்பலஞ்சி பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்பு.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட பிறகு பொங்கல் கொண்டாட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு.

பொங்கல் விழாவில் மக்களோடு அமர்ந்து உணவருந்தினார் ராகுல்காந்தி.

* ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறப்பு.

ஒரே நேரத்தில் 5,000 பேருக்கு குறையாமல் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இட வசதி.

புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தை அமைச்சர் சுரேந்திரன் திறந்து வைத்தார்.

* இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்ற அமமுகவினர் நமக்கு தம்பியா?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதை எல்லாம் கட்சி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது-அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுகவில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கோகுல இந்திரா தெரிவித்த கருத்து, சசிகலாவின் அரசியல் வருகை தொடர்பானது அல்ல - சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

* ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்துகொண்டேன்.

நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்கிறார்கள் தமிழக மக்கள்- டெல்லி புறப்படுவதற்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் ராகுல் புகழாரம்.

விவசாயிகளுக்கு துணை நிற்பதை பெருமையாக கருதுகிறேன்.
மத்திய ஆட்சியாளர்கள் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள் என்று ராகுல் குற்றச்சாட்டு

* அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவு பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரத்தில் இன்று புகழ் மிக்க ஜல்லிக்கட்டு போட்டி.

காலை 8 மணிக்கு தொடங்கும் ஜல்லிக்கட்டு  மாலை 4 மணி வரை நடைபெற்றது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 26 காளைகள் அடக்கிய சிறந்த வீரர்கள் திருநாவுக்கரசு, மற்றும் விஜய் முதல் பரிசு பெற்றனர்.

சிறந்த காளை - G.R. கார்த்திக் காளை.
8 சுற்றுகள் நிறைவு - 520 காளைகள்
420 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு

மாடுபிடி வீரர்கள் 46 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர், பார்வையாளர்கள் இருவர் என 58 பேர் காயம்.

* பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது:

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகர ஜோதி ஒளிர்ந்தது.

சபரிமலையில் முதன் முறையாக குறைந்த பக்தர்களுடன் மகரஜோதி தரிசனம்.

கொரோனா தாக்கம் காரணமாக 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.

* ஆளுமை மிக்க தலைவர் பழனிசாமி: ஜே.பி.,நட்டா புகழாரம்.

ஆளுமைமிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது என பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா புகழாரம் சூட்டினார்.

பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா பொங்கல் விழா மற்றும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். துக்ளக் விழாவில் அவர் பேசியதாவது:வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னெடுத்து செல்வதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். தமிழகத்தில் வரும் காலத்தில் பா.ஜ., ஆட்சி அமையும். அதனால் தான் பல்வேறு துறையினர் பா.ஜ.வில் இணைகின்றனர்.

ஆளுமைமிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது . இது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages