அக்னிப்புரட்சி இன்றைய (20.01.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.87.85 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.80.67 க்கு விற்பனை.
* 40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 35 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு
* வரும் 22ஆம் தேதி நடைபெறவிருந்த அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வெருவித் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்
* சீனா அருணாச்சல பிரதேசத்திற்குள் 60-70 கிமீ தொலைவுக்கு நுழைந்து விட்டது. இரு வழி சாலை அமைத்துள்ளது.ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது...
தபீர் காவ், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்
* நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கல்யாணசுந்தரம் - கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமனம்
* கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.
சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் ரெய்டு.
* ஜன. 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜன. 29-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
* மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் முதல்கட்டமாக 15-ம் தேதி வரையிலும், 2-ம் கட்டமாக மார்ச் 1-ம் தேதி வரையிலும் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளால் மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
* தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு:
முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 8,97,694 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ப்பு.
18 முதல் 19 வயதைச் சேர்ந்த ஆண்கள் 4.80 லட்சம் பேரும், பெண்கள் 4.16 லட்சம் பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
* பணிவாக இருப்பது போல் மக்களை ஏமாற்றி வருகிறார் ஓ.பி.எஸ் -தேனி மாவட்டம் போடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிர்பந்திக்கவில்லை.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கிறோம் என்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி - ஸ்டாலின்.
திமுக கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தது அல்ல, ஒருமித்த எண்ணங்களின் அடிப்படையில் அமைந்தது - ஸ்டாலின்.
திமுக ஆட்சி வந்தவுடன் மாவட்டந்தோறும் மகளிருக்கென தனி நீதிமன்றம் அமைக்கப்படும் - ஸ்டாலின்.
*;காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்:
நான் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என ஸ்டாலின் கூறுகிறார்.
நான் எம்எல்ஏவாக மக்களால் தேர்தெடுக்கப்பட்டவன் தானே
முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.
அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? - முதலமைச்சர்.
* ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமெரிக்க அதிபரராக பதவி ஏற்கும் ஜோ பைடன், துணை அதிபராக பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ் ஆகியோரின் மணற்சிற்பங்களைச் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ளார்.
புதிய அமெரிக்க அதிபரையும் துணை அதிபரையும் வாழ்த்தும் வகையில் மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ள சிற்பத்தில் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம், அந்நாட்டின் தேசியக் கொடி ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.
* டிராக்டர் பேரணியை அனுமதிக்க டெல்லி காவல்துறைக்கே அதிகாரம் உள்ளதால், இதில் தலையிட போவதில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்.
டிராக்டர் பேரணிக்கு எதிரான மனுவை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
* பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.
சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் திடீர் உடல்நலக் குறைவு.
கோயில் சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் சிலைகள் மாயமாகியுள்ளது?
4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது:
விக்யான் பவனில் விவசாயிகள் பிரதிநிதிகள் - மத்திய அரசின் பிரதிநிதிகள் சந்திப்பு.
பேச்சுவார்த்தைக்கு முன்பு அமித் ஷாவை சந்தித்து மத்திய நரேந்திர சிங் தோமர் ஆலோசனை.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
ஏற்கனவே 9 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை.
* சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சசிகலா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால்
பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சிறையில்
பரிசோதனை.
மருத்துவர்கள் அறிவுரைப்படி, சசிகலா பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதி.
சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்பு என தகவல்.
சிறையில் இருந்து வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது .
* அமைச்சர் காமராஜின் உடல் நிலை சீராக உள்ளது:
சுவாச கருவிகள் மூலம் அமைச்சர் காமராஜிக்கு சிகிச்சை.
சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் தகவல். காமராஜின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்.
அமைச்சரின் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது - மருத்துவர்கள்.
* பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்து, மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் சசிகலா!
காய்ச்சல், இருமல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சசிகலா!
கொரோனா ஆன்டிஜென் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது!
💥வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!
💥வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக நடுவண் அரசு அறிவிப்பு
எனினும் ஒரு குழு அமைத்து அதன் முடிவின் அடிப்படையில் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக நடுவண் அரசு கூறியதை ஏற்க மறுத்தனர் உழவர் போராட்ட குழுவினர்
* அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்.
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸுக்கு ஜோ பிடன் உள்ளிட்டோர் வாழ்த்து.
* அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய-அமெரிக்க இடையேயான உறவு மேலும் வலிமை பெறும் என மோடி நம்பிக்கை.
* துணை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து கமலா ஹாரிஸ் சொந்த ஊரான துளசேந்திபுரத்தில் கிராமத்தினர் விளக்கு ஏற்றி கொண்டாடினர்.
No comments:
Post a Comment