"MBC 20% இடஒதுக்கீடு: வன்னியர் சொத்தை அபகரிப்பது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" - வன்னியர் சங்கம் - Agnipuratchi

"MBC 20% இடஒதுக்கீடு: வன்னியர் சொத்தை அபகரிப்பது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" - வன்னியர் சங்கம்

Share This

"MBC 20% இடஒதுக்கீடு: வன்னியர் சொத்தை அபகரிப்பது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" - வன்னியர் சங்கம்

MBC இடஒதுக்கீடு என்ன இவர் அப்பன் வீட்டு சொத்தா? வன்னியர்களுக்கு நீதியான இடஒதுக்கீட்டை கொடுத்தால், MBC இடஒதுக்கீட்டில் தாங்கள் அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்வது குறையும் என்பதற்காக, ஒரு முக்கிய தலைவர் வன்னியர்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என எதிர்க்கிறாராம்!

ஒருவேளை தனி இடஒதுக்கீடு இல்லையென்றாலும், சரியான அளவு உள் ஒதுக்கீடாவது கொடுங்கள் என்று மருத்துவர் அய்யா அவர்கள் கூறினால், அதையும் கூட கொடுக்க முடியாது என மறுக்கிறாராம்!

'கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிகொண்டது போல', வன்னியர்கள் போராடி பெற்ற இடஒதுக்கீட்டில் இவர் உரிமை கொண்டாடுகிறார். இவரோ, இவரை சார்ந்தவர்களோ MBC இடஒதுக்கீட்டிற்காக ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டது இல்லை. தங்கள் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வேண்டும் என ஒரு சிறு துண்டுப்பிரசுரத்தைக் கூட தமது வாழ்நாளில் அச்சடித்தது இல்லை.

இப்படி எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு, நோகாமல் நோன்பு கும்பிடுவது போல 'மருத்துவர் அய்யா அவர்களின் தியாகப் போராட்டத்தாலும், வன்னியர்களின் 21 உயிர்த் தியாகத்தாலும்' கிடைத்த MBC இடஒதுக்கீடு, இவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்; அதில் வன்னியர்களுக்கு உரிய நீதி கிடைத்துவிடக் கூடாது என அழிச்சாட்டியம் செய்கிறார்.

இந்த அநீதியை, இந்த அக்கிரமத்தை எப்படி பொறுத்துக்கொள்வது?  வன்னியர்களின் உரிமைப்போரால், வன்னியர்கள் உயிர்த்தியாகத்தால் கிடைத்த இடஒதுக்கீடு, வன்னியர்களுக்கு கிடைக்காமல் இவர்கள் மட்டும் அளவுக்கதிகமாக அனுபவிக்க வேண்டுமா?

வன்னியர்களின் உரிமையை 32 ஆண்டுகளாக அபகரித்தது போதாதா? அதிகாரத்தின் உச்சாணி கொம்பில் இருந்துகொண்டு வன்னியர் இடஒதுக்கீட்டை தடுப்பது நியாயமா? வன்னியர் சொத்தை அபகரிப்பது இவருக்கு வெட்கமாகவே இல்லையா?

அதிகார இடத்தில் அமர்ந்து கொண்டு வன்னியர் இடஒதுக்கீட்டை மறுக்கும் அநீதியை மக்கள் எழுச்சியால் முறியடிப்போம். வன்னியர் இடஒதுக்கீட்டை மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் அடைந்தே தீருவோம்!

'மருத்துவர் அய்யா அவர்கள் விஸ்வரூபம் எடுத்தால் தமிழ்நாடு தாங்காது' என்பதை சுட்டிக்காட்டி நாம் எச்சரிக்க விரும்புகிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages