அக்னிப்புரட்சி இன்றைய (24.01.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.88.29 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.81.14 க்கு விற்பனை.
* மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29 ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக அடுத்த நடவடிக்கை என்ன?
பிப்ரவரி மாத கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை.
* திருத்தணி அருகே நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேத இந்து பண்டிதர்கள் சார்பில் வெள்ளி வேல் வழங்கப்பட்டது.
* புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறார் நமச்சிவாயம். காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் துறக்க உள்ளதாக தகவல்
27ஆம் தேதி தில்லி சென்று ஜெ.பி.நட்டா தலைமையில் பாஜகவில் இணைய திட்டம்
* வெளிநாட்டு கப்பல்கள் அத்துமீறி எல்லைக்குள் நுழைந்தால் துப்பாக்கிச்சூடு நடத்த வகை செய்யும் சட்டத்தை (Coast guard law)சீன அரசு நிறைவேற்றியுள்ளது
* தேசிய பெண் குழந்தைகள் திருநாளையொட்டி இன்று ஒரு நாள் உத்தரகாண்ட் முதல்வராக சிருஷ்டி கோஸ்வாமி என்ற பெண் செயல்பட உள்ளார்
https://m.timesofindia.com/city/dehradun/haridwars-srishti-goswami-pursuing-bsc-agriculture-to-become-uttarakhand-cm-for-one-day/articleshow/80411716.cms
* லாலு பிரசாத் உடல் நிலை கவலைக்கிடம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
முன்னாள் மத்திய அமைச்சரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத்தின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறிய நிலையில் அவர் ராஞ்சியில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார்.
டெல்லியில் அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக லாலுவின் மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். லாலு பிரசாத்தின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க மருத்துவர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத்தின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
* தனித்து போட்டியிடத் தயாரா? என்னை காப்பி அடிக்கும் பாஜக! நட்டா வந்தாலும் நோட்டா கீழ் தான்?! புஹாஹாஹா.. .. சீமான்!
* உதவியுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்- மருத்துவமனை:
சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது; கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது- விக்டோரியா மருத்துவமனை.
* கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் இன்று வேல் உள்ளது- முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்.
கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் இன்று வேல் உள்ளது.
கையில் வேலெடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது, தண்டனைதான் கிடைக்கும்.
மக்களிடம் உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும் -முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
* நாளை நடைபெற இருந்த பாமக நிர்வாக குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.
நிர்வாக குழு கூட்டம் வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாளை முக்கிய முடிவு எடுப்பதாக அறிவித்திருந்தது பாமக.
* நான் எனது மனதின் குரலை பேச வரவில்லை, உங்களின் குரலை கேட்க வந்துள்ளேன்.
நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன்.
நாட்டின் வளர்ச்சிக்கு தமிழக இளைஞர்களின் பங்கு அளப்பரியது.
தமிழகத்தில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும் - ஈரோட்டில் ராகுல்காந்தி பிரசாரம்.
* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கான முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார்.
சென்னை கோபாலபுரத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
* புதுச்சேரியில் காங்- திமுக கூட்டணி நீடிக்கிறது - முதலமைச்சர் நாராயணசாமி.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரிக்கு 3 முறை பிரசாரத்திற்கு வர, ராகுல்காந்தி ஒப்புக் கொண்டுள்ளார்.
துணை நிலை ஆளுநர்
கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி, வருகிற 26 ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் டிராக்டர் பேரணி நடத்த உள்ளது- நாராயணசாமி.
* ஜன.30-ம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 10.45 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது.
* அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு:
ஒரு மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும்.
லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம்.
60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும்.
No comments:
Post a Comment