அக்னிப்புரட்சி இன்றைய (25.01.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.88.29 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.81.14 க்கு விற்பனை.
* நாமக்கல்: முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 25 காசுகள் குறைந்து 4 ரூபாய்க்கு கீழ் சென்றது. 25 காசுகள் குறைந்து முட்டை விலை ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்தது இந்த அதிமுக அரசு - மு.க.ஸ்டாலின்.
கொரானா காலத்தில் தமிழக மக்களை அதிமுக அரசு கைவிட்டு விட்டது. ஆட்சியில் இல்லையெனினும் மக்களுக்கு 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் உதவிகள் செய்தது திமுக.
மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழக மக்களுக்கு ஊடகங்களின் மூலம் ஒரு உறுதியை தருகிறேன். "உங்கள் பிரச்சினையே தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்களில் உங்கள் பிரச்சினையை தீர்ப்பதே வேலை".
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்திட்டத்தின் மூலம் 30 நாட்களில் தமிழகத்தின் 234 தொகுதி மக்களையும் சந்திக்கிறேன். அங்குள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் எனக்கு கோரிக்கை மனுக்களை தரலாம்.
வரும் 29-ஆம் தேதி திருவண்ணாமலையில் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு, நான் மட்டுமே பொறுப்பு.
மக்களின் கோரிக்கைகளை தீர்க்க எனது நேரடிக் கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்படும்.
www.stalinani.com என்ற இணையதளம் வழியாகவும் மக்கள் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்ய தவறியதை திமுக செய்யும். - மு.க.ஸ்டாலின்
* புதுச்சேரியில் காங் எம்.எல்.ஏக்கள் 2 பேர் ராஜினாமா.
வில்லியனூர் தொகுதியில் வெற்றிபெற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
ராஜினாமா கடிதத்தை புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அளித்தனர்.
அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணையபோவதாக வந்த தகவலையடுத்து, காலையில் அவர் காங்கிரசிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
* வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.
வாட்ஸ்அப் புதிய விதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து.
* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு.
ஜனவரி 24-ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் நீட்டிப்பு.
10-வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு. மேலும் 6 மாதம் காலம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு.
* புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், காங். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிக நீக்கம்.
பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம் பதவியை
ராஜினாமா செய்வதற்கு சிறிது நேரம் முன்பு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
* முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு.
தலைமறைவாக உள்ள பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளியை கைது செய்ய மூன்று வார அவகாசம்.
கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்த காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கொலை, கொள்ளை வழக்கில் கைதாகியுள்ள ஜெகதீஷுக்கு ஜாமின் வழங்கவும் மறுப்பு.
* நாளை கிராமசபை கூட்டம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு;
“கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம்"-தமிழக அரசு உத்தரவு.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மறு உத்தரவு வரும் வரை, கூட்டங்களை நடத்த அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்.
* பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை - ரிசர்வ் வங்கி விளக்கம்.
* 9 ஆம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு:
9ஆம் வகுப்பிற்கு 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து, 9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
* விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை உடைப்பு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை.
* கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
2 தடுப்பூசிகளுமே இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது -மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
* மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கிறோம் - ராகுல்காந்தி!
திமுகவுடன் நல்ல நட்புறவு நீடிக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை தமிழ்நாடு முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதும் ஸ்டாலின் மீதும் தனக்கு நல்ல மரியாதை இருப்பதாகக் கூறினார்.
* குடியரசு தினத்தில் கிராம சபையை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டும் ஒருமுறை நெரிப்பதா?
கட்சி கூட்டங்களை நடத்தும் முதல்வருக்கு கிராம சபை என்றால் கசக்கிறது -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
* தேர்தலில் அதிமுக வெற்றியை யாரும் தடுக்க முடியாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசிடம் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது மூன்று மாதத்தில் நடவடிக்கை எடுத்து குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பொதுமக்களின் மனுக்களுக்கு 100 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதை சுட்டிக்காட்டினார். தமிழக அரசிடம் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது மூன்று மாதத்தில் குறைகள் களையப்பட்டு வருவதாகவும், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
* எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு.
குடியரசு தின விழாவை ஒட்டி விருதுகளை அறிவித்தது மத்திய அரசு:
எஸ்.பி.பி.க்கு மறைவுக்கு பிந்தையதாக விருது அறிவிப்பு.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே உள்ளிட்ட மேலும் 6 பேருக்கு பத்மவிபூஷண் விருது.
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது.
வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது.
மறைந்த கோவை தொழிலதிபர் சுப்பிரமணியனுக்கு பத்மஸ்ரீ விருது.
மொத்த 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு.
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு.
No comments:
Post a Comment