வன்னியர் இட ஒதுக்கீடு: 9-ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்- பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி அவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment