டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி பணிகளில் வன்னியர்களுக்கு தொடரும் பட்டை நாமம்! - மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு----- - Agnipuratchi

டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி பணிகளில் வன்னியர்களுக்கு தொடரும் பட்டை நாமம்! - மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு-----

Share This

டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி பணிகளில் வன்னியர்களுக்கு தொடரும் பட்டை நாமம்! - மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு-----

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முதல் தொகுதி போட்டித் தேர்வுகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  6 துணை ஆட்சியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த பணியிடங்களில் ஓரிடம் கூட வன்னியர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த விவரத்தை ஏற்கனவே முகநூல் பக்கத்தில் நான் விரிவாக விளக்கியிருந்தேன்.

இப்போது இன்னும் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. முதல் தொகுதிப் பணிகளில் 93 காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அவற்றில் 18 பணிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் வன்னியர்களுக்கு கிடைத்தவை வெறும் 4 இடங்கள் மட்டும் தான். இது 4.5% மட்டுமே.

அதேபோல், மாவட்டக் கல்வி அதிகாரிகள் பணியிடங்களில் 3 இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட   வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் ஓரிடம் கூட வன்னியர்களுக்கு கிடைக்கவில்லை. பட்டை நாமம் தான் போடப்பட்டது. இந்த சமூக அநீதியைப் போக்குவதற்காகத் தான் வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்று போராடி வருகிறோம்.

                         **********

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages