உழவர்களுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி பாராட்டும் பாரம்பரிய பண்பாட்டு விழா மாட்டுப் பொங்கல். போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம் பெருமை சேர்ப்போம். - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

உழவர்களுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி பாராட்டும் பாரம்பரிய பண்பாட்டு விழா மாட்டுப் பொங்கல். போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம் பெருமை சேர்ப்போம். - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

உழவர்களுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி பாராட்டும் பாரம்பரிய பண்பாட்டு விழா மாட்டுப் பொங்கல். போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம் பெருமை சேர்ப்போம். - பாமக தலைவர் ஜி.கே.மணி          

தை பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கலை கிராம வழக்கில் சில பகுதிகளில் பட்டிப் பொங்கல் என்றும் அழைப்பர். உழவர்களுக்கு உறுதுணையாய் இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி பாராட்டும் பாரம்பரிய பண்பாட்டு விழாவாக தொன்றுதொட்டு மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கலன்று கால்நடைகளை குளிப்பாட்டி, மாடுகளின் கொம்புகள் சீவி, வண்ணம் பூசி, கூரான கொம்பில் கொப்பி மாட்டி, குஞ்சம் அல்லது சலங்கை கட்டி, குங்குமம்-திருநீறு பூசி, புதிய மூக்கணாங்கயிறு மாற்றி, மாலை அணிவித்து கால்நடைகள் சிறப்பிக்கப்பட்டு, உழவுக் கருவிகள் சுத்தம் செய்து சந்தனம் - குங்குமம் வைத்து, பொங்கலிட்டு தேங்காய், பழம், கரும்பு வைத்து படைத்து, மாடுகளுக்கு வாழைப்பழம் கொடுத்து மகிழ்வித்து வழிபடுவதே வழக்கம்.        

கால்நடைகளை போற்றுவோம் ... பாரம்பரியம் மிக்க பண்பாட்டு மாட்டுப் பொங்கலைப் போற்றுவோம் ...
கிராமங்கள்தோறும்  வீரதீர விளையாட்டுப் போட்டிகள்,கலை நிகழச்சிகள், எங்கும் கோலாகலம்
கொண்டாடி மகிழ்வோம்... பெருமை சேர்ப்போம் ...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages