அனைத்து சமுதாயங்களும் முன்னேறினால் நாடு முன்னேறும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முதல் கையெழுத்து!" - Agnipuratchi

அனைத்து சமுதாயங்களும் முன்னேறினால் நாடு முன்னேறும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முதல் கையெழுத்து!"

Share This

"அனைத்து சமுதாயங்களும் முன்னேறினால் நாடு முன்னேறும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முதல் கையெழுத்து!"

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது முதல் நாள் முதல் பணியாக வரலாற்று சிறப்புமிக்க 17 உத்தரவுகளில் கையொப்பமிட்டுள்ளார். அவற்றில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை, அனைத்து சமுதாயங்களுக்கும் இடையே சமத்துவத்தை நிலைநாட்டல் ஆகியன மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவுகள் ஆகும்.

ஜோ பைடன் பதவியேற்ற உடனடியாக கையொப்பமிட்ட "இன சமத்துவத்தை முன்னோக்கி மேம்படுத்துதல் மற்றும் அரசின் திட்டங்கள் சென்றடையாத சமுதாயங்களுக்கு ஆதரவளித்தல் குறித்த செலாணை" (Executive Order On Advancing Racial Equity and Support for Underserved Communities Through the Federal Government) எனும் தனது உத்தரவின் மூலம், அமெரிக்காவின் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சம உரிமை அளிப்பதை, குறிப்பாக வஞ்சிக்கப்பட்ட, பின்தள்ளப்பட்ட சமுதாயங்களுக்கு உரிமை அளிப்பதை தனது முதல்நிலைக் கடைமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

சமுதாயங்களுக்கு சமவாய்ப்பு அளிப்பதுதான் அமெரிக்க ஜனநாயகத்தின் அடித்தளம், அமெரிக்காவின் பன்முகத்தன்மை அமெரிக்காவின் பெரும்பலம் (Equal opportunity is the bedrock of American democracy, and our diversity is one of our country’s greatest strengths) என்று தனது உத்தரவின் முதல் வரியில் குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், வரலாற்று ரீதியில் வஞ்சிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு சமவாய்ப்பு அளித்தால் அதனால் ஒவ்வொரு அமெரிக்கரும் பயனடைவார்கள். அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி  5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 366 லட்சம் கோடி)

(By advancing equity across the Federal Government, we can create opportunities for the improvement of communities that have been historically underserved, which benefits everyone.  For example, an analysis shows that closing racial gaps... would amount to an additional $5 trillion in gross domestic product in the American economy over the next 5 years.)

அமெரிக்காவின் அனைத்து சமுதாயங்களுக்கு சமவாய்ப்பை உறுதிசெய்வது தனது முழு அரசின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ள அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் பல்வேறு சமுதாயங்களுக்கு இடையே சமத்துவத்தை உருவாக்குவதற்கான பல திட்டங்களை இந்த உத்தரவில் சட்டமாக்கியுள்ளார். (Affirmatively advancing equity, civil rights, racial justice, and equal opportunity is the responsibility of the whole of our Government.)

அமெரிக்க அரசின் அனைத்து துறைகளிலும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான பொறுப்பை அந்நாட்டின் உள்நாட்டு கொள்கை அமைப்புக்கு அளித்துள்ளர் (the White House Domestic Policy Council). இந்த அமைப்பு அனைத்து அரசு துறைகளுடனும் இணைந்து அமெரிக்காவின் எல்லா சமுதாயங்களுக்கும் அமெரிக்க அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்;

அமெரிக்க அரசின் ஒவ்வொரு துறையிலும் வஞ்சிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு வாய்ப்பளிப்பதில் உள்ள தடைகள் குறித்த விவரத்தையும், அத்தகைய தடையை சரிசெய்வற்கான துறைவாரியான திட்டத்தையும் 200 நாட்களில் ஒவ்வொரு துறையும் அளிக்க வேண்டும்;

நாட்டின் ஒவ்வொரு சமுதாயத்தின் நிலை குறித்த புள்ளிவிவரம் இல்லாதது சமத்துவத்தை நிலைநாட்ட தடையாக உள்ளது. எனவே அனைத்து மக்கள் பிரிவுகளின் சமூக பொருளாதார நிலை கூறித்த துள்ளியமான புள்ளிவிவரங்களை திரட்டுவதற்கான அமைப்பு (Equitable Data Working Group) உருவாக்கப்படுகிறது;

அமெரிக்க அரசின் நிதிநிலை அறிக்கையில் வரலாற்று ரீதியாக வஞ்சிக்கப்பட்ட சமூகங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்;

அரசாங்கத்தின் கொள்முதல் மற்றும் அரசு ஒப்பந்தங்களை அளிக்கும் போது அதில் வஞ்சிக்கப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்;

அரசின் திட்டங்கள் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்; அமெரிக்க அரசின் திட்டங்களால் அனைத்து சமுதாயங்களும் உண்மையாகவே பயன்பெருகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்;

வஞ்சிக்கப்பட்ட மற்றும் போதுமான பங்கினை பெறாத சமூகங்களுக்கான திடங்களை செயலாக்கும் வகையில், அந்த சமுதாயங்களை பிரதிநிதத்துவப்படுத்தும் சமுதாய அமைப்புகளுடன் அரசின் தொடர்பை அதிகமாக்க வேண்டும்.

- இவ்வாறு அமெரிக்காவின் அனைத்து சமுதாயங்கள், குறிப்பாக வரலாற்று ரீதியில் வஞ்சிக்கப்பட்ட, பின்தள்ளப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாக வைத்து, பதவியேற்ற முதல் நாளே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதற்கான உத்தரவில் கையொப்பமிட்டிருப்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஆகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages