அக்னிப்புரட்சி இன்றைய (01.2.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.2.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.2.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.88.82 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.81.71 க்கு விற்பனை.

* தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் மாதம் வரை டேட்டா வழங்கப்படும்.

* சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்து.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு.

* மினிலாரி ஏற்றி உதவி ஆய்வாளர் கொலை.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மினிலாரி ஏற்றி கொலை.

உதவி ஆய்வாளர் பாலு என்பவர் மினிலாரி ஏற்றி கொல்லப்பட்டார்.

வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்டபோது  விபரீதம்.

54 வயதான உதவி ஆய்வாளர் பாலு மினி லாரி ஏற்றி கொல்லப்பட்டார்.

தப்பி ஓடிய முருகவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பணி! : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

* திருச்சி விமான நிலையத்திற்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, 200க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியேற்றி தீவிர சோதனை - மிரட்டல் விடுத்தவர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை.

* மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள வசதியாக இலவச டேட்டா.

* நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது.

பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் உட்பட 10 பேர் கைது.

கலவரம் ஏற்படுத்த முயற்சி, வெறுப்புப் பேச்சு உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

* சென்னையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி.

தமிழக அரசின் தளர்வை அடுத்து, 50% ரசிகர்களுக்கு பி.சி.சி.ஐ அனுமதி.

* தமிழகத்தில் வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

* மதுரையில் 50 ஆண்டு பழமையான கட்டடத்தை மீண்டும் புதுப்பிக்கும் பணியின் போது விபத்து.

கட்டடத்தை இடித்து வரும் போது, எதிர்பாராமல் இடிந்து விழுந்ததில், 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு.

சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் தீவிரம்.

* அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்:

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து" - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.

ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது - முதலமைச்சர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019 ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் வைத்த கோரிக்கை மீது அரசு நடவடிக்கை.

* “மாய லாலிபாப்”-ஐ கொடுத்து ஏமாற்றி இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஒரு லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றியுள்ளது.

தமிழக திட்டங்களுக்கு ஆக்கப்பூர்வமான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்யவில்லை -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-இல் இருந்து 10 ஆயிரமாக உயர்வு.

தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு -அரசாணையில் தகவல்.

வருகை பதிவேட்டின் படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages