அக்னிப்புரட்சி இன்றைய (04.02.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.89.13 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.82.04 க்கு விற்பனை.
* நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து.
தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராட்டம் - ₹8 கோடி மதிப்புள்ள 15 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் சேதம் என தகவல்.
* அமைதியான போராட்டங்கள் வெற்றிகரமான ஜனநாயகத்தின் அடையாளம்.
இந்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
இந்திய சந்தைகளில் அதிகரிக்கப்படும் தனியார் முதலீட்டை வரவேற்கிறோம் - அமெரிக்கா.
* மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்; 5 வது நாளான இன்று மாநிலங்களவை தொடங்கியது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மாநிலங்களவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
* அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்:
கொரோனா பாதிக்கப்பட்டு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ், முற்றிலும் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
* டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் பயணம்.
டெல்லி காசிப்பூர் எல்லைக்கு சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் தடுத்து நிறுத்தம். தடுப்புவேலிகளுக்கு பின்னால் நின்று எம்.பிக்கள் முழக்கம்.
கனிமொழி, திருச்சி சிவா, வெங்கடேசன், திருமாவளவன், ரவிக்குமார் தடுத்து நிறுத்தம்.
* காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மதூரில் உள்ள கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர்.
கற்கள் சரிந்து விழுந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் இடர்பாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.
*தமிழகத்தில் இணையவழி சூதாட்டம்- தடை செய்யப்பட்டதற்கான சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் அறிமுகம் செய்கிறார்
* அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது:
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரணை- உச்சநீதிமன்றம்.
கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காத சூழலில், விசாரணை பட்டியலில் வழக்கு.
தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது 21ஆம் தேதிக்குள்ஆளுநர் முடிவெடுக்க அறிவுறுத்தல்.
* ஆன்லைன் சூதாட்டம் தடைச்சட்ட மசோதா:
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்.
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்.
* 7 பேர் விடுதலை - திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் - முதலமைச்சர்.
* சசிகலா வரும் 8-ம் தேதி தமிழகம் வருகிறார்:
சசிகலா 7-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், சசிகலாவின் வருகை 8 ம் தேதிக்கு மாற்றம் - டிடிவி தினகரன்.
* மினி கிளினிக்குகளுக்கான மருத்துவர்கள் நியமனம் மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே நடைபெற வேண்டும்.
தனியார் மூலம் மருத்துவர்களை தேர்வு செய்ய வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு முடித்துவைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
* இலங்கையில் உள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
62 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன.
மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை இந்திய தூதரகம் வழங்கி வருகிறது. - மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம்
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 குறைந்து ரூ.35,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.46 குறைந்து ரூ.4,483-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.72.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* தமிழக டிஜிபியிடம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அதிமுக மூத்த நிர்வாகிகள் புகார்.
அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் புகார் மனு.
அமைச்சர்களுடன், கே.பி.முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மனு அளிப்பு.
தமிழகத்திற்கு வரும்போது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் எனத் தகவல்.
* கடலூர்: சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டண விபரங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு.
உயர்கல்வித்துறையிலிருந்து, சுகாதாரத்துறைக்கு கல்லூரி நிர்வாகம் மாற்றப்பட்ட நிலையில், கல்விக் கட்டணம் அறிவிப்பு.
எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம் ரூ.13,610ஆக நிர்ணயம் செய்து அறிவிப்பு.
பல்மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம் ரூ.11,610ஆக நிர்ணயம் செய்து அறிவிப்பு.
மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த கல்வி கட்டணத்தில், கற்பித்தல் கட்டணம் மட்டும் ரூ.30,000ஆக நிர்ணயம் செய்து அறிவிப்பு.
* திமுக ஆட்சியில் முதல் 100 நாட்களில் 95 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு - மு.க.ஸ்டாலின்.
தன்னிடம் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க தனியாக துறை உருவாக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஸ்டாலின் அதற்குரிய ரசீதுகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் 95 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
மத்திய அரசை தட்டிக்கேட்கும் அரசாக திமுக ஆட்சி இருக்கும் என்று தெரிவித்த ஸ்டாலின், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
💥பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம்...
உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு புதிய பதில்
No comments:
Post a Comment