அக்னிப்புரட்சி இன்றைய (05.02.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.02.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.02.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.89.39 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 29 காசுகள் அதிகரித்து ரூ.82.33 க்கு விற்பனை.

* கொடுரமாக வீசும் கொரோனா இரண்டாம் அலை : உலகம் முழுவதும் 10.54 கோடி பேர் பாதிப்பு.

உலக அளவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,99,342 பேர் பாதிப்பு.

கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10,53,92,199 பேராக உயர்வு.

கொரோனாவில் இருந்து 7,72,28,560 பேர் மீண்டனர்.

உலகம் முழுவதும் 2,58,71,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 14,138 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 22,92,508 பேராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் 3,400 பேர் ஒரே நாளில் கொரோனாவிற்கு மரணமடைந்தனர்.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு மொத்தம் 4,66,865 பேர் மரணமடைந்தனர்.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 1,17,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,72,68,283 பேராக உயர்வு.

* அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது.

நிதி பற்றாக்குறை காரணமாக ஓய்வு வயது கடந்தாண்டு 59 ஆக உயர்த்தப்பட்டது.

தமிழக அரசின் நிதி நிலைமை பற்றாக்குறையில் இருப்பதால் ஓய்வூதியம் மற்றும் பண பலன்களை வழங்கும் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு மிச்சப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 59ல் இருந்து 60 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு இன்று சட்டசபையில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் - சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை.

* ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்க சட்டமுன்வடிவு  இன்றுதாக்கல்:

விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க இன்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

* பிப்ரவரி 8 முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் - உயர்கல்வித்துறை.

வாரத்தின் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு.

இந்த கல்வியாண்டு முழுவதும் வாரத்தின் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் - அரசாணை வெளியீடு.

💥மியான்மர் : பின்னோக்கி சுழலும் மக்களாட்சி !

தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான வழக்குகளை வேறு எந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க கூடாது - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்.

* தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 குறைந்து ரூ.35,528-க்கு விற்பனை; ஒரு கிராம் தங்கம் ரூ.4,441-க்கு விற்பனை.

* கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு.

விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு.

16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி - எடப்பாடி பழனிசாமி

கொரோனா காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிர்க்கடன் தள்ளுபடி.

விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் - எடப்பாடி பழனிசாமி.

* பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையானார் இளவரசி.

சொத்துவழக்கில் 4 ஆண்டு தண்டனை காலம் நிறைவடைந்து, சிறையில் இருந்து வெளியே வந்தார் இளவரசி.

சசிகலா தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார் இளவரசி.

* தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் 7 பேர் விடுதலைக்கு, முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியரசுத் தலைவரை நாளைக்கே சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார் - ஸ்டாலின்.

* ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் - முதல்வர் பழனிசாமி.

விரும்பத்தகாத நிகழ்வுகளான, காவல் துறையினரை தாக்கிய வழக்குகளை தவிர்த்த பிற வழக்குகள் வாபஸ் - முதல்வர்.

* தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவிப்பு.

பிப்ரவரி 2ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு.

* திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கடலூர் பெரியார் கலைக்கல்லூரி, சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் திருக்கொளஞ்சியப்பன் அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி ஆகியன வருகின்றன.

* சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு:

சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும்.

ஜூன் மாத‌த்திற்கு பிறகுதான் நேரடி வகுப்புகள் தொடங்கும் என சென்னை பல்கலை. அறிவிப்பு.

* இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன் எடுத்தது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.

அந்த அணியின் இரண்டு வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினாலும், கேப்டன் ஜோ ரூட் தனது நூறாவது டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார்.

ஜோ ரூட் 128 ரன் எடுத்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுற்றது.

இந்திய அணி வீரர் பும்ரா 2 விக்கெட்டையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

* உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நிகழ்ச்சி - ஶ்ரீ வைகுண்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

நீதிமன்றம் கூறிய போது, கடன்களை தள்ளுபடி செய்யவில்லை.

திமுக கூறிய பின்பு, தற்போது பயிர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார் முதல்வர்.

“நான் என்ன கூறுகிறேனோ, அதையே முதலமைச்சர் செய்து வருகிறார்"

7 பேர் விடுதலை விவகாரத்திலும், ஆளுநரை நாங்க சந்தித்த பின் தான், அவர் சந்தித்தார்.

பொய் நாடகங்களை நாள்தோறும் நடத்தி வருகிறார் முதலமைச்சர் - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

* விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்ற முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு.

கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், நல்ல எதிர்காலத்தையும் உருவாக்கும் - விஜயகாந்த்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages