அக்னிப்புரட்சி இன்றைய (08.02.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (08.02.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (08.02.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.89.39 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.82.33 க்கு விற்பனை.

* கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் - நடிகர் சூர்யா ட்வீட்.

வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அச்சத்துடன் முடங்கிவிட முடியாது, அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம் - சூர்யா.

* பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்டார் சசிகலா.

சொத்து வழக்கு சிறை தண்டனை நிறைவடைந்து ஜன. 27-ம் தேதி விடுதலையான நிலையில் தமிழகம் புறப்பட்டார் சசிகலா.

பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா.

💥பெங்களூர் தேவனஹள்ளி விடுதியில் இருந்து அதிமுக கொடி கட்டிய சகட்டில் சென்னை புறப்பட்டார் சசிகலா

சசிகலா தங்கியிருந்த அருகே தமிழில் வைக்கப்பட்ட பதாகைகள் கொளுத்தப்பட்டன

தமிழில் பதாகைகள் வைக்கப்பட்டதால் கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தினர்

* மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் பதிலளிக்கிறார்.

* மத்திய பட்ஜெட்டில் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய தொகை குறைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

மத்திய அரசு விவசாயிகளுக்கானதும் அல்ல; இளைஞர்களுக்கானதும் அல்ல.
பெருமுதலாளிகள் மட்டுமே மத்திய அரசுக்கு கடவுள்- ராகுல்.

* முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் சேர்ப்பு.

இந்தியா பாலோ ஆன் முடிவை தவிர்க்க 41 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

* அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை; அதிமுக கொடியை பயன்படுத்துவதை ஏற்க முடியாது.

சசிகலா வருகையால் பதற்றம் தினகரனுக்கே, அதிமுகவினருக்கு அல்ல-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

* மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது பதிலளித்துப் பிரதமர் உரை:

போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியிருப்பதாகவும், எந்த வகை போராட்டம் எங்கு நடந்தாலும் அவர்கள் சென்றுவிடுவதாகவும் விமர்சித்தார்.

போராட்டங்கள் இல்லாமல் வாழ முடியாத அத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என மோடி கூறினார்.

* திரிணமூல் எம்.பி. பேசும்போது ஆத்திரமூட்டல், பேச்சு சுதந்திரம் என்றெல்லாம் பேசியதாகவும், ஆனால் அவர் மேற்குவங்கத்தை நினைத்துக் கொண்டு இங்கு பேசுவதாகவும் கிண்டல் தொனியில் விமர்சித்தார்.

அதேமயம், நாகரிகமாகவும், நல்ல சொற்களையும் தேர்ந்தெடுத்துப் பேசும் குலாம் நபி ஆசாத்தை பார்த்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்.

* கிருஷ்ணகிரி அருகே சசிகலாவை வரவேற்க நின்றிருந்தவர்கள் கொளுத்திய பட்டாசில் இருந்து தீப்பற்றி இரு கார்கள் எரிந்து நாசமாகின.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நின்றிருந்தவர்கள், பட்டாசுகளை காரின் அருகே வைத்து கொளுத்தியுள்ளனர்.

இதில் ஒரு காரில் பற்றிய தீ அருகே இருந்த காருக்கும் பரவியது.

தீப்பிடித்து எரிந்த கார் வெடித்துவிடப் போகிறதோ என அஞ்சி அருகில் இருந்தவர்கள் தூரமாகச் சென்றுள்ளனர்.

இதனால் தீயை அணைக்க ஆளில்லாமல் 2 கார்களுகளும் முற்றிலும் எரிந்து நாசமாகின.

அருகில் இருந்த மற்றொரு காரின் கண்ணாடியை உடைத்து அவசர அவசரமாக அந்த காரை அங்கிருந்து நகர்த்தினர்.

* சென்னை டெஸ்ட்: 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 178 ரன்னிற்கு ஆல் அவுட்.

இந்தியாவிற்கு இங்கிலாந்து 420 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளார்.

* நிச்சயமாக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்-  வி.கே.சசிகலா.

மிக அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். 
விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன்.

அதிமுக அலுவலகத்துக்கு செல்வேனா என்பதை பொறுத்திருந்து பார்க்கவும் - வி.கே.சசிகலா.

உங்கள் அன்புக்கு நான் அடிமை - எம்.ஜி.ஆர் பாட்டை மேற்கோள் காட்டி சசிகலா பேச்சு.

தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை. அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன். - சசிகலா.

ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது.

புரட்சித்தலைவி வழிவந்த ஒரு தாய் பிள்ளைகள், ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் - வி.கே.சசிகலா.

* தமிழகத்தில் 9 ஆம் தேதி முதல் காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

8.82 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், 20 ம் தேதிக்குள் சுகாதார பணியாளர்கள் முழுமையாக தடுப்பூசியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் அச்சமின்றி முன்வர வேண்டுனெவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

* ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம்.டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்- சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தகவல்.

* மாநில அரசு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த 9 இடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும் - அண்ணா பல்கலை.

கூடுதல் இடங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விளக்கம் அளிக்க தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

* உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு ஆயத்தமாக உள்ளது
- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

* இளவரசி, சுதாகரன் சொந்தமான சொத்துக்கள் அரசுடைமை

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகம் நடவடிக்கை

💥வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை

:நாடாளுமன்றத்தில் முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி திட்டவட்டம்

அதிமுகவின் பொது எதிரி ஆட்சி கட்டிலில் அமராமல் தடுக்க, ஒரே அணியாக செயல்படுவோம் - VK ச‌சிகலா பேச்சு

* முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த மருத்துவ மாணவர்கள்:

கடலூர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிதம்பரம்-ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அறிவித்தது, கட்டணச்சலுகை வழங்கியது, இனிவரும் காலங்களில் அரசுக்கட்டணம் நிர்ணயித்ததற்காக அக்கல்லூரியின் மாணாக்கர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

* திருவில்லிபுத்தூர் மற்றும் மேகமலைப் பகுதிகளை இணைத்து நாட்டின் 51-வது புலிகள் காப்பகத்தினை அமைக்க நடுவண் அரசு அனுமதி

* கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages