அக்னிப்புரட்சி இன்றைய (10.02.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (10.02.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (10.02.2021) முக்கிய செய்திகள்.

* பெட்ரோல்-டீசல் விலை உயர்வு:

சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.89.96 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.82.90 க்கு விற்பனை.

* தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை 3 பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு.

2020-21ம் கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது.

* முதல் விக்கெட்?!
சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் வசிக்கும் நிலையில், அவரை பிரேமலதா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருந்துவருவதாக பிரேமலதா உள்ளிட்டோர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

* சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம்:

குட்கா வழக்கு விவகாரத்தில் 2வது உரிமைமீறல் நோட்டீஸ் ரத்து.

உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

கடந்த 2017ம் ஆண்டு பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் தி.மு.க., உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது.

நோட்டீசை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில் நோட்டீசை ரத்து செய்து மீண்டும் முறையாக அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

* சேலத்தில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும்- ஸ்டாலின்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு வேலை, ஊதியத்தை தாண்டி அவர்களின் சுயமரியாதை உயரும்
- கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

* தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வந்தார்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார், உமேஷ் சின்ஹா, சந்திர பூஷன் ஆகியோரும் சென்னை வந்தனர்.

இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் தமிழகத்தில் ஆய்வுசட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள், ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை.

வரும் 12-ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு குறித்து ஆய்வு.

* தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என யுனெஸ்கோ பட்டம் வழங்கி உள்ளது தவறான தகவல் என பாடத்திட்டத்தில் இருந்து நீக்க கோரி வழக்கு.

தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தக குழு பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

* அரசுக்கு கிரண்பேடி தரும் பிரச்சினைகள் குறித்து குடியரசு தலைவரிடம் தெரிவித்தேன்.

கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க பிரதிகளை குடியரசு தலைவரிடம் வழங்கினேன் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

* வி.கே.சசிகலா சொத்துகளும் பறிமுதல்:

திருவாரூர் மாவட்டத்தில் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் பறிமுதல்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துகள் பறிமுதல்: திருவாரூர் ஆட்சியர்.

* கொலை வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று திரும்பிய இருவர் கொலை:

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கொலை வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று திரும்பிய இருவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குணசேகரன் மற்றும் கலைச்செல்வன் ஆகிய 2 பேரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

* குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரை:

மக்களவை நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மாற்றுவதாக, பெண் எம்.பி.க்களுக்கு பிரதமர் பாராட்டு.

உலக நாடுகளில், நம்பிக்கை நட்சத்திரமாக, சுடரொளியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

கொரோனாவை எதிர்த்துப் போராடிய முன்களப் பணியாளர் கடவுளுக்கு நிகரானவர்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாடு சுயசார்பு நிலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.

கொரோனா காலத்தில் நம்மைக் காத்துக் கொண்டதோடு, பிற நாடுகளுக்கும் இந்தியா மருத்துவ உதவிகள் அளித்துள்ளது.

பொருளாதாரம் உள்ளிட்டவற்றில், தமது தலைமையிலான அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளது.

ஒவ்வொரு துறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து, நல்ல பல சீர்திருத்தங்களை தமது அரசு செய்து வருகிறது.

கொரோனா காலத்தில், 2 லட்சம் கோடி அளவிற்கான திட்டங்கள் ஏழை - எளியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. -பிரதமர் நரேந்திர மோடி

* யானைகள் இறப்பு - சிபிஐ விசாரணை:

தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

* அ.ம.மு.க. கட்சியில் இருந்து விலகி யாராவது இணைய முன்வந்தால் அதிமுக தலைமை முடிவு எடுக்கும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

பிற கட்சிகளின் தலைவர்களின் கருத்துகளுக்கு பதில் கூற முடியாது.

அ.தி.மு.க. கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை மூலம் நடவடிக்கை.

அதிமுகவும், கூட்டணியும் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்.

அ.ம.மு.க. கட்சியில் இருந்து விலகி யாராவது இணைய முன்வந்தால் அதிமுக தலைமை முடிவு எடுக்கும்.

தமிழகத்தில் திட்டமிட்டு விஷமமான பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
எள்முனை அளவு கூட அதிமுகவில் பிளவு இல்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages