தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்டவெற்றி கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
வன்னியர் சமூகத்திற்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி சட்டமாக்கியதை கொண்டாடும் வகையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாமக தலைவர் ஜி கே மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்துக் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்
இதனை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும். துணை முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும். சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு. சி.வி.சண்முகம் அவர்களையும், அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சரும் மாநிலங்களவை உறுபினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்
உடன் தியாகச் செம்மல் திரு ஜி.கே.மணி தலைவர் பா.ம.க புதுவை மாநில பாமக அமைப்பாளர் திரு கோ.தன்ராஜ் , பாமக வழக்கறிஞர் திரு கே.பாலு. மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கணேஷ் குமார் அவர்கள் இருந்தனர்.
No comments:
Post a Comment