அக்னிப்புரட்சி இன்றைய (15.02.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.91.19 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.84.44 க்கு விற்பனை.
* இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக்கட்டணம் - மத்திய அரசு.
சுங்கச்சாவடிகளின் அனைத்து வழிகளும், இன்று நள்ளிரவு முதல், பாஸ்டேக் வழிகளாக அறிவித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், பாஸ்டேக்கின்றி செல்லும் வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் பெறப்படும் என தெரிவித்துள்ளது.
நாளை முதல் பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் அல்லது, செயல்பாட்டில் இல்லாத பாஸ்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளின் பாஸ்டேக் பாதைக்குள் நுழையும் போது, இருமடங்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மூலமான கட்டணத்தை மேலும் ஊக்குவிக்கவும், எரிபொருள் வீணாவதை தவிர்க்கவும், சுங்கச் சாவடிகளில் தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காகவும் இந்த பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
* மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 14 கிலோ சமையல் சிலிண்டர் ஒன்றின் விலை 785 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் தற்போது சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
💥திசா ரவியை பெங்களூரில் இருந்து தில்லி அழைத்து செல்வதற்கான transit remand பெறவில்லை
திசாவை 5 நாள் துறை காவலில் அனுப்ப பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிடும்போது தன் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற திசாவின் தரப்பு வழக்கறிஞர் கூட நீதிமன்றத்தில் இல்லை
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பட்டியாலா நீதிமன்ற Magistrate செயல்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் ரெபேக்கா மம்மென் யோவான் கருத்து தெரிவித்துள்ளார்.
* செவிலியர் படிப்புகளுக்கு நாளை முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
* பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும்- பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்.
மத்திய அரசு உத்தரவு படி பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து விற்பனை.
வாகன டேங்குகளில் தண்ணீர் புகாமல் பார்த்து கொள்ளவும்.
டேங்கில் சேர்ந்த நீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு-தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு.
* சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் 24-ம் தேதி முதல் விநியோகம் - அதிமுக தலைமை அறிவிப்பு.
ஜெ. பிறந்தநாளான பிப்.24ஆம் தேதி அதிமுகவில் விருப்பமனு விநியோகம்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் - அதிமுக.
* திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
பட்டியல் இனத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக ஏற்கனவே வழக்கு. தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ்.பாரதி மனு.
ஆர்.எஸ்.பாரதி மனுவுக்கு பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு. மனு மீதான விசாரணை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.
* மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் படிப்புகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றுமாறு தமிழக பல்கலை.,கள் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகின்றனவா?
அண்ணா பல்கலையில் எம்.டெக், பயோடெக்னாலஜி படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி.
* பெட்ரோல் டீசலைத் தொடர்ந்து சமையல் கேஸ் விலையும் கடும் உயர்வு; மக்களுக்கு மத்திய அரசு தந்த கொடூரப் பரிசு.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்.
* வலிமை படம் தொடர்பான தகவல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் - நடிகர் அஜித்.
வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்த செயல் வருத்தம் அளிக்கிறது.
அரசு, அரசியல், விளையாட்டு தொடர்பான இடங்களில் வலிமை அப்டேட் கேட்காதீர்கள்.
* சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதான அவரது கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமின்.
கைது செய்யப்பட்டு 60 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
* சென்னை டெஸ்ட் : இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்.
இந்திய அணியின் அஸ்வின் அடித்த அபார சதம் மூலம் இங்கிலாந்துக்கு வெற்றி பெற 482 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் வெறும் 19 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ் மற்றும் டாம் சிப்லே என இருவரும் இந்திய பந்து வீச்சாளர்கள் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தனர்.
* விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் கைதுக்கு திருமாவளவன் கண்டனம்.
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் கைதுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
* சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட பிப். 21 முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் - கமல்ஹாசன்.
maiam.com மூலமாகவும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என கமல் அறிவிப்பு.
* சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட பிப்.17 முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு
பொதுத்தொகுதிக்கு ரூ 25 ஆயிரம், தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு ரூ 15 ஆயிரம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம்.
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.17 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ரூ 1,000 செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.
* புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா:
சட்டப்பேரவை சபாநாயகருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார், மல்லாடி கிருஷ்ணா ராவ்.
சுகாதார துறை அமைச்சராகவும் மல்லாடி கிருஷ்ணராவ் இருந்து வருகிறார்.
புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோரை தொடர்ந்து 3வதாக மல்லாடி கிருஷ்ணா ராவ் ராஜினாமா.
No comments:
Post a Comment