அக்னிப்புரட்சி இன்றைய (18.02.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (18.02.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (18.02.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.91.98 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.85.31 க்கு விற்பனை.

* புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார் தமிழிசை செளந்தரராஜன்.

தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார் .

பொறுப்பு துணை நிலை ஆளுநராக உறுதிமொழி ஏற்று பதவியேற்று கொண்டார் தமிழிசை.

பதவியேற்பு விழாவில் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு.

* புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்று கொண்ட பின் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி:

மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக புதுச்சேரிக்கு வந்துள்ளேன்.

தமிழில் உறுதிமொழி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை இரட்டை குழந்தையாக கருதி கவனம் செலுத்துவேன் - தமிழிசை சௌந்தர‌ராஜன்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது.

நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில், நாமே தயக்கம் காட்டக் கூடாது - தமிழிசை சௌந்தர‌ராஜன்.

பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய மனு மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை.

என்னுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுவேன்  - தமிழிசை செளந்தரராஜன்.

தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை; ஆராதிக்கப்படுகிறது - தமிழிசை.

* தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விருப்பமனு அளிக்கலாம்" - விஜயகாந்த்.

“மார்ச் 5ம் தேதிக்குள் விருப்பமனுக்களௌ பூர்த்தி செய்து கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்; பொதுத்தொகுதிக்கு விருப்பமனு கட்டணமாக ரூ.15,000, தனித்தொகுதிக்கு ரூ.10000 நிர்ணயம்” - விஜயகாந்த்.

* சட்டமன்ற தேர்தலையொட்டி, 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு.

வேளாண்துறை இணை செயலாளர் ஆனந்த், சுகாதாரத்துறை இணை செயலாளர் அஜய் யாதவ் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமனம்.

* கடலூர் : புவனகிரி அருகே பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை.

குழந்தையின் தந்தை ராஜு மீது தாய் புகார் - போலீசார் விசாரணை.

* திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதியை பயன்படுத்த தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்.

பொது நல நிதியை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,380-க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி!

ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாக்காவிடம் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.

* தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நகர்ப்புற நூலகங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், கிராமப்புற நூலகங்களையும் விரைவாக திறக்க வேண்டும் - நீதிபதிகள்.

* திமுக மாநில மாநாடு மார்ச் 14ஆம் தேதி திருச்சியில் நடைபெறும். - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* அசாம் : துப்ரி - புல்பரி இடையே பிரம்மபுத்ரா ஆற்றின் மீது அமையவுள்ள பாலத்திற்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

18 கி.மீ தொலைவில், ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்தியாவின் மிக நீண்ட பாலமாக அமையவுள்ளது.

* வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்.

பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த‌தையடுத்து, இன்று ரயில் மறியல் போராட்டம்.

டெல்லி, பீகார், ஜம்மு - காஷ்மீர் மாநில ரயில் நிலையங்களில் விவசாயிகள் மறியல் போராட்டம்.

* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்கு அளிக்கக் கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்கு அளிக்கக் கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

* புதுக்கோட்டை அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம்.

குற்றவாளி டேனிஸ் பட்டேலுக்கு மரணதண்டனை விதித்தது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம்.

கடந்த 2019ல் மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் அதிரடி தீர்ப்பு.

* 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் தொடங்கியது.

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 1,097 வீரர்கள் பதிவு செய்த நிலையில் 292 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

* சக்ரா படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடையை  நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மார்ச் 5ம் தேதி வரையிலான தியேட்டர்கள் வசூல் தொகை குறித்து மார்ச் 10ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு உத்தரவு.

* ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் ரூ14.25  கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வகையில் சாதனை: தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிசை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

* புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆளுநர் மூலம் முயற்சி செய்கிறது மத்திய அரசு - சென்னை விமானநிலையத்தில் கே.எஸ்.அழகிரி பேட்டி.

* புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு.

பிப்.22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமிக்கு ஆளுநர் உத்தரவு.

சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு.

* மார்ச் 15ஆம் தேதி முதல் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு.

டீசல் விலை உயர்வு, டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்.

* மதுரையில் நடைபெற்று வரும் இந்திய கம்யூ. கட்சி மாநாட்டில் ஸ்டாலின்,கே.எஸ்.அழகிரி, டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பு:

* வரும் தேர்தல் முடிவுகளை பிரதமர் மோடி யூகித்துவிட்டார்.

அதனால்தான் தேர்தல் நடக்கும் இடங்களுக்கு எல்லாம் அடிக்கடி சென்று மக்களை சந்திக்கிறார் - டி.ராஜா.

இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் எனில் பாஜக, அதிமுகவை வீழ்த்த வேண்டும் - டி.ராஜா.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages