உலக சமூகநீதி தினம் பிப்ரவரி 20 - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

உலக சமூகநீதி தினம் பிப்ரவரி 20 - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

உலக சமூகநீதி தினம் பிப்ரவரி 20 - பாமக தலைவர் ஜி.கே.மணி

சமூகநீதி என்றால் என்ன?

           மக்கள் சேர்ந்து வாழும் தொகுப்பிற்கு, அதாவது மக்கள் கூட்டத்திற்கு சமூகம் என்று சொல்கிறோம். மனித சமூகத்தில் அநீதி உள்ளது. நீதி வேண்டும். இதுதான் சமூகநீதி. சமூகத்தில் ஒவ்வொருவரும் அடிப்படை தேவைகளும் உரிமைகளும் கிடைக்கப்பெற்று மாண்புடன் வாழ வேண்டும்.
          
பயிர்கள், செடிகள், மரங்கள் வளர்க்க தண்ணீர்ப் பாய்ச்சி உரம் போடுவதுபோல் மனித சமூக வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவைகளை உரிமைகளை வழங்கப்பட வேண்டும்.

           
மக்களின் அடிப்படை தேவைகள் என்னென்ன?
உணவு, உடை, இருப்பிடம் (வீடு), கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து போன்ற பல்வேறு நிலைகளிலும் ஏற்றத்தாழ்வுகள். மேடு பள்ளங்கள் நிறைந்துள்ளன. இது போக்கப்பட வேண்டும். எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். ஒவ்வொருவரும், ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு பெற வேண்டும்.
      
சமூகநீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு. தந்தை பெரியாருக்கு பின் சமூகநீதிக்கு போராடுவது மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் என்பது நாடறியும்.  சமூகநீதியின் ஒரு அங்கம் தான் இட ஒதுக்கீடு. சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் 40 ஆண்டு கால சமூகநீதிப் போராட்ட வரலாறு நாடறியும். வன்னியர் 20% இட ஒதுக்கீடுக்கான மாநாடுகள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், பட்டை நாமப் பட்டினிப் போராட்டம், ஒரு நாள் இரயில் மறியல், ஒரு நாள் சாலை மறியல், ஒரு வார கால தொடர் சாலை மறியல், 21 பேர் உயிரிழப்பு, இலட்சக்கணக்கானோர் சிறை, தேர்தல் புறப்க்கணிப்பு என எண்ணிலடங்கா போராட்டங்கள் நடத்தியவர் மருத்துவர் அய்யா அவர்கள். வன்னியர் உள்ளிட்ட 108 ஜாதிகளுக்கு MBC பிரிவு 20% இட ஒதுக்கீடு, அருந்ததியர் 3% இட ஒதுக்கீடு, இஸ்லாமியர் 3 1/2% இட ஒதுக்கீடு, மத்திய கல்வி நிறுவனங்கள் OBC 27% இட ஒதுக்கீடு பெற்றுக்கொடுத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள். SC, ST மக்களுக்கு மத்திய மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கியவர் மருத்துவர் அன்புமணி MP அவர்கள் என்ற சமூகநீதி வரலாறு பா.ம.கவுக்கு உண்டு.
     
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு,MBC, BC, SC, ST, இஸ்லாமியர், கிறித்தவர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் உள்ள இடஒதுக்கீடு அளவு,இதில் உள்ள மிகப்பெரிய குறைகள், குளறுபடிகள், கோளாறுகள் எல்லாம் சுட்டிக்காட்டி உண்மை புள்ளி விவரங்கள், ஆதாரங்களோடு தொடர்ந்து வாதாடி வந்தது பா.ம.க ஜி.கே.மணி. வன்னியர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட குறைகளை போக்க சட்டமன்றத்தில் தனியாகவே விவாதிக்க ஒரு நாள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வைத்து,அதில் நீண்ட நேரம் புள்ளி விவரங்களோடு வாதாடி ஒரு வெள்ளை அறிக்கை கேட்டு சட்டமன்றத்தில் பெற்றதும் அதில் ஜி.கே.மணி. ஆனால் இன்னும் வன்னியர் இட ஒதுக்கீடு நிறைவேறவில்லை.குறைபாடுகள் போக்கப்படவில்லை. எல்லா சமுதாய மக்களுக்கும் உரிய சமூகநீதி கிடைக்கப்பட வேண்டும். சமூகநீதி நிலைக்க, நீடிக்க பாடுபடுவோம். உறுதியேற்போம் ...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages