அக்னிப்புரட்சி இன்றைய (23.02.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.92.90 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.86.31 க்கு விற்பனை.
* தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்:
நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் இன்று காலை
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளி.
கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை நாட்டிலேயே தலை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும்.
ஜெயலலிதாவின் வேதாநிலையம் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.
குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.
நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
2021-22ம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்த கடன் 5,70,189 கோடி ரூபாயாக இருக்கும்.
மாநில மொத்த உற்பத்தி மதிப்பீடு 26.69 சதவீதமாக இருக்கும். மொத்த கடன் 15ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது.
* கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில் சட்டவிரோத கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிக்கபல்லாபூரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரியை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ஜெலட்டின் குச்சிகலை அகற்றும்போது எதிர்பாரவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* தமிழக சட்டப்பேரவை கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறும் - சபாநாயகர் தனபால் அறிவிப்பு.
பிப்.25 முதல் பிப்.27 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு.
* நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.
பட்டியலின பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.2,750-ல் இருந்து ரூ.3,835 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொது, ஓபிசி பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.3,750-ல் இருந்து ரூ.5,015ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வு கட்டணத்தில் ஜிஎஸ்டி வாரியாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 விதிக்கப்பட்டுள்ளது.
* பட்ட படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைகிளை.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான
இடஒதுக்கீட்டினை பழைய முறைப்படி தொடர கோரிய வழக்கு தள்ளுபடி.
தமிழக அரசு பள்ளிகளில் மாநில மொழிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது - நீதிபதிகள்.
* டூல் கிட் வழக்கில் திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமின் - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு:
இரு நபர் உத்தரவாதத்துடன் தலா ரூ.1 லட்சம் செலுத்த உத்தரவு. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார் சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி.
* தமிழக சட்டப்பேரவையில் வ.உ.சி, ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ஆகிய 3 தலைவர்களின் திருவுருப்படத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.
ராமசாமி படையாட்சியாரின் படத்தை தொடர்ந்து வ.உ.சி, ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் படங்கள் சட்டப்பேரவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் படங்கள் திறக்கப்படும் என கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா ஆய்வு கூட்டத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
No comments:
Post a Comment