அக்னிப்புரட்சி இன்றைய (24.02.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.90 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.31 க்கும் விற்பனை.
* தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்காக டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.
* இந்தியா-இங்கிலாந்து இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்காக பிரத்யேகமாக மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.
* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தக்குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிதித்துறை கூடுதல் செயலாளராக நந்தக்குமாரை நியமித்து தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
* மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி இன்று முதல் அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்குகிறது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்பமனு பெற்று பூர்த்தி செய்து தரலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
* மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை.
* ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு சசிகலா மரியாதை;
தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு சசிகலா மரியாதை. சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்.
ஜெயலலிதாவின் உடன் பிறப்புகள் மீண்டும் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றிபெற பாடுபட வேண்டும் - சசிகலா.
* புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார்.
புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்ந்த நிலையில் ஆட்சியமைக்க வேறு கட்சிகள் உரிமை கோராததால் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
* சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்:
18,555 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவு அருங்காட்சியகம் திறப்பு.
ஜெயலலிதா மெழுகுசிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் ஜெ., புகைப்பட தொகுப்பு, விருதுகள், பயன்படுத்திய பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
* கொரோனா பாதிப்பு குறித்து மதிப்பிட தமிழகம், கேரளா, மகாராஷ்டிரம் வருகிறது மத்திய குழு:
கொரோனா தடுப்பு உள்ளிட்ட பொது சுகாதார விவகாரங்களில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு உதவ உயர்மட்ட பன்னோக்கு நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது.
தமிழகம், கேரளம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், கர்நாடகம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் இந்த குழுவினர் செல்வார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், RT-PCR சோதனைகளை அதிகப்படுத்தி, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* 5 மாநில தேர்தல்: டெல்லியில் துவங்கியது தேர்தல் ஆணையத்தின் முக்கிய ஆலோசனை.
தமிழகம், கேரளா, புதுச்சேரி,அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் துவங்கியது.
* ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் விவகாரம்:
நோட்டீசுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய சட்டமன்ற செயலாளர், உரிமைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி.
தனிநீதிபதி உத்தரவு நகலை இணைக்க விலக்கு - நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வு உத்தரவு.
* புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
நாராயணசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.
அமைச்சரவை ராஜினாமா கடிதம் துணை நிலை ஆளுனர் தமிழிசையிடம் வழங்கப்பட்டது.
* மயிலாடுதுறை: கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மலர்விழி கைது.
பொறையாரை சேர்ந்த மனோகர் என்பவரிடம் பட்டா பெயர் மாறுதலுக்காக ரூ 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கைது.
நாகை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மலர்விழியை கைது செய்தனர்.
* இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கியது.
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அகமதாபாத் ஸ்டேடியத்தில்; இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தனது 100 வது டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா.
* 60 வயதைக் கடந்தவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு.
45 வயதை கடந்த உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி - மத்திய அரசு.
அரசு மையங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் - மத்திய அரசு.
* Reliance End - Adani End:
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் (Reliance End) மற்றோரு முனை அதானி (Adani End) என்று பெயரிடப்பட்டுள்ளது.
* சாயப்பட்டறை கழிவால் பாதிக்கப்பட்ட 28 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 127 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்:
கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் நதி மாசடைந்து, திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் பாதிப்பு - மனு.
மனுவை பரிசீலித்து, தகுதியான நபர்களுக்கு மே 31ஆம் தேதிக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.
* போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு - அரசு எச்சரிக்கை.
வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே விடுப்பு எடுத்திருந்தாலும், நாளை கண்டிப்பாக பணிக்கு திரும்ப வேண்டும் - அரசு.
* திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்"- போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.
95% தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர் - தொழிற்சங்கங்கள்.
வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டுகோள்.
* இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 6 விக்கெட்கள் வீழ்த்தி அக்சர் பட்டேல் அசத்தல்.
முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து.
* புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - பள்ளிக் கல்வி இயக்ககம்.
No comments:
Post a Comment