அக்னிப்புரட்சி இன்றைய (26.02.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.90 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.31 க்கும் விற்பனை.
* தமிழகம் முழுவதும் 2வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு.
* ஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் முமு்மனை மின்சாரம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். 5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்ப்பட்டுள்ளது என கூறினார்.
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 89.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,364-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களும் தள்ளுபடி.
* மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் www.cbse.nic.in இணையதளத்தில் வெளியானது.
* கடந்த ஜனவரி 31ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்திய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல் தாளில் 4,41,798, இரண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றிருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
* பள்ளி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாளை கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில், அதற்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தக்கூடாது என புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகநாதன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
பிப்ரவரி 27, 28 ஆகிய 2 நாள்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் பணியிட மாறுதல் பெறும் ஆசிரியர்களின் உரிமை பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
* புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளையிலிருந்து மார்ச் 5ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம்- புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன்.
* புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு - துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு.
வாட் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ 1.40 காசுகள் குறைய வாய்ப்பு.
* பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.
இன்னும் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற பரபரப்பு நிலவுகிறது.
* விருதுநகர் காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்.
விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு.
* தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு;
பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றவே 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு பதில் மனு தாக்கல்.
* புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு 2 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பிரிவின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு:
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடனும் தள்ளுபடி;
மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தேர்தலுக்கும் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மக்களுக்கு புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய கடன் வாங்க வேண்டியுள்ளது.
வளர்ச்சித் திட்டங்களை கடன் பெற்று செயல்படுத்துவதில் தவறு இல்லை
கடன் சுமையை குறைக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் -முதல்வர் பழனிசாமி.
* வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு:
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி .
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் MBC (V) எனும் பிரிவு உருவாக்கப்பட்டு வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலுள்ள மற்ற சாதியினருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம்.
சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் சட்ட மசோதா தாக்கல்.
சட்ட முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் பழனிசாமி.
* நாடு முழுவதும் பொது ஊரடங்கை மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதைய நிலையே நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* 10.5% உள்ஒதுக்கீடு ராமதாஸுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி:
முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றி! கூட்டணி குறித்து நாளை மருத்துவர் இராமதாசு அய்யா அறிவிப்பார் - ஜி.கே.மணி.
* மாசிமகம் திருவிழாவையொட்டி புதுச்சேரியில் நாளை தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.
* மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும்போது, மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்ட தேர்தல் ஏன்? - மம்தா பானர்ஜி.
நான் மேற்கு வங்கத்தின் மகள்; அனைத்து கட்ட தேர்தலிலும் வெல்வேன் - மம்தா.
No comments:
Post a Comment