வன்னியர் இடப்பங்கீடு யாரால்
கிடைத்தது: மருத்துவர் இராமதாசு அய்யாவிடம் ஓர் உரையாடல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சூ.பாலப்பட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஏ. தணிகைச்செல்வியை எனது முகநூல் பக்கத்தைத் தொடரும் அனைவரும் நன்றாக அறிந்திருப்பீர்கள்.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வீர முழக்கமிட்டு பல காணொலிகளை வெளியிட்டவர். வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களில் கலந்து கொண்டு வீர தீரமாக முழக்கம் இட்டவர். இதற்காக கடந்த திசம்பர் 30&ஆம் தேதி நான் அந்த சிறுமியை தொடர்பு கொண்டு பேசினேன். இதை அப்போதே முகநூலில் பதிவிட்டிருக்கிறேன்.
அந்த சிறுமி தணிகைச் செல்வி நேற்று காலை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வன்னியர் இடப்பங்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார். அந்த சிறுமிக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடல்:
தணிகைச் செல்வி: அய்யா வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்ததற்கு நன்றி அய்யா
நான்: உன்னாலதாம்மா இந்த இடப்பங்கீடு கிடைத்திருக்கு. இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் நீ தான்மா ஆக்ரோஷமா கோஷம் போட்டுகிட்டு போனாய். நீயும், உன்னைப் போன்றவர்களும் நடத்திய போராட்டத்தால் தான்மா இந்த இடப்பங்கீடு கிடைத்திருக்கிறது. உனக்கு தான்மா நன்றி!
தணிகைச் செல்வி: அய்யா.... அதெல்லாம் இல்லைங்க அய்யா. 40 வருஷத்துக்கு மேல அய்யா நடத்தி வரும் போராட்டத்தினால் தான் அய்யா இட ஒதுக்கீடு கிடைச்சிருக்கு அய்யா.
நான்: அது இருக்கட்டும்மா. இந்த போராட்டத்துல நீ ஆக்ரோஷமா முழக்கமிட்டு போனாய் அல்லவா. நீங்க எல்லாம் நடத்திய போராட்டத்தின் பயன் தான்மா இந்த இட ஒதுக்கீடு.
தணிகைச் செல்வி: இல்லீங்க அய்யா. உங்கள் போராட்டத்தினால் தான் அய்யா வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது அய்யா!
நான்: அப்படியாம்மா... சரி நாம் அனைவரின் போராட்டத்தினால் தான் இடப்பங்கீடு கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம்மா. நீ நன்றாக படித்து, ஏற்கனவே நீ கூறியவாறு கலெக்டராக வர வேண்டும்மா. இந்த இடப்பங்கீட்டை நாம போராடி வாங்கியிருப்பதன் நோக்கமே உன்னைப் போன்ற குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காத் தான்மா. புரியுதா? இந்த இடப்பங்கீட்டை பயன்படுத்தி நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் அம்மா!
தணிகைச் செல்வி: கண்டிப்பாக செய்வேன் அய்யா.... நன்றி அய்யா!
*************
No comments:
Post a Comment