அக்னிப்புரட்சி இன்றைய (13.03.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.03.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.03.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 14 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.

* காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத், சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் உண்ணாவிரதம்.

கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறி உண்ணாவிரதம்.

* மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சென்னை வருகை ரத்து: 

சென்னையில் இன்று பாஜக தேர்தல் அறிக்கை குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் பயணம் ரத்து.

* என்எல்சி தொழிற்சங்கங்களின் அங்கீகார தேர்தல் : தொமுச, அண்ணா தொழிற்சங்களுக்கு அங்கிகாரம்.

தமிழகம் முழுவதும் கலைஞரே வேட்பாளர்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்:

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க தந்திரம், சதி, சூழ்ச்சிகளை செய்வார்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதிகார பலம் கொண்டவர்கள் திமுகவை எளிதாக வெற்றி பெற விடமாட்டார்கள்.

தேர்தலில் தந்திரங்கள், சதிகள், சூழ்ச்சிகளை முறியடிக்க திமுகவினரின் உழைப்பு, ஒத்துழைப்பு தேவை.

தமிழகம் முழுவதும் கலைஞரே வேட்பாளர் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.

விருப்ப மனு அளித்த அனைவரையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என கடலளவு ஆசை இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை கையளவு தானே - திமுக தலைவர் ஸ்டாலின்.

தேர்தல் அறிக்கையுடன் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.33,840-க்கு விற்பனை.

* காரைக்குடியில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒத்துழைப்பு இல்லை- ப.சிதம்பரம்.

காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு.

இப்படியே போனால் அடுத்த முறை 25 சீட்டும் கிடைக்காது- ப.சிதம்பரம் எச்சரிக்கை.

* திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு:

திமுக தேர்தல் அறிக்கைதான் எப்போதும் தேர்தலில் கதாநாயகன் -மு.க.ஸ்டாலின்.

சட்டசபை நிகழ்ச்சிகள் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்- திமுக தேர்தல் அறிக்கை.

பொங்கல் பண்டிகை தமிழர் பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

திருக்குறளை தேசிய நூலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்- திமுக தேர்தல் அறிக்கை.

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ3 குறைக்கப்படும்- திமுக தேர்தல் அறிக்கை

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ5 குறைக்கப்படும்.

டீசல் விலை லிட்டருக்கு ரூ4 குறைக்கப்படும்.

எரிவாயு சிலிண்டருக்கு ரூ100 மானியம் வழங்கப்படும்.

500 இடங்களில் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்- திமுக தேர்தல் அறிக்கை.

சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அரசு பணியாளர்களாக்கப்படுவர்.

* கடலூர்: திட்டக்குடியில் கொரோனா தடுப்பூசி எனக்கூறி மயக்க ஊசி செலுத்தி  30 பவுன் நகையை கொள்ளையடித்த பெண் கைது.

* பணம் இருந்தால் வேட்பாளர் வாய்ப்பு’: காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடி.

காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் விசுவாசமாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பணம் இருப்பவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுவதாக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி தனது சமூக வலைதள பக்கத்தில், காங்கிரஸ் கட்சியில் தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும் காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். 

எனது தலைவர் ராகுல்காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி ஆகி இருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள ஜோதிமணி இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு என ஜோதிமணி தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

* திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு.

1.திருப்பரங்குன்றம் - பொன்னுத்தாய்

2.கந்தர்வக்கோட்டை (தனி) - சின்னதுரை

3.கோவில்பட்டி - சீனிவாசன்.

4.திண்டுக்கல் - பாண்டி

5.அரூர் (தனி) - குமார்.

6.கீழ்வேளூர் (தனி) - நாகை மாலி

* அமமுக: மயிலாடுதுறை சட்டப்பேரவை தேர்தல் பிரசாரக் குழுவில் தன்னார்வலராக இணைந்து பணியாற்ற விருப்பமா?

உங்களைப் பற்றிய விவரங்களை கீழ்கண்ட Google Form-ல் பதிவு செய்யுங்கள்.

இணைப்பு : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeBfk4F0c3mqlqw1mIEy7jNjsBsCKCguZyyXSNUZRDVdMP9VQ/viewform?usp=sf_link

நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்.

#SupportKomalAnbarasan
#Mayiladuthurai #AMMK
#VoteForKomalAnbarasan
-Advt.

* காங்கிரசை களங்கப்படுத்தும் ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கோபண்ணா ட்வீட்.

காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அதிரடி கருத்து.
நமது தலைவர்களை நாமே களங்கப்படுத்தலாமா? -  கோபண்ணா.

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி  கூறியிருந்தார்.

* சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் நடத்தி வந்த விஷ்ணுபிரசாத் போராட்டத்தை முடித்தார்

கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார் விஷ்ணுபிரசாத்

* திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages