அக்னிப்புரட்சி இன்றைய (15.03.2021) முக்கிய செய்திகள்.
* மிகப்பெரிய அச்சுறுத்தலாக கொரோனா பாதிப்பு தொடர்கிறது: ராகுல் காந்தி ட்வீட்.
ஏற்கனவே எச்சரித்தது போல மிகப்பெரிய அச்சுறுத்தலாக கொரோனா பாதிப்பு தொடர்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் உள்ளிட்டவற்றை கடைபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
* 4ஆம் கட்ட அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அமமுக பொதுச்செயலாளர் தினகரன்.
தினகரன் எம்எல்ஏவாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் டாக்டர்.காளிதாஸ் போட்டி.
* கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின்.
அயனாவரம் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
வேட்பு மனு தாக்கலுக்கு பின், திருவாரூரில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார் ஸ்டாலின்.
* எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பழனிசாமி.
7-வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
1989ஆம் ஆண்டு சேவல் சின்னத்தில் போட்டியிட்டார் எடப்பாடி பழனிசாமி.
1991 சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வேட்பு மனு தாக்கலுக்கு பின், முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு :
முதன் முதலாக 1989ஆம் ஆண்டு போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளித்தார்.
அதிமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகிக்க ஜெயலலிதா வாய்ப்பளித்தார்.
எடப்பாடி தொகுதி ஏற்றம் பெற அரும்பாடுபட்டுள்ளேன்.
அதிமுக தேர்தல் அறிக்கை எடுபடுமா என்பது தேர்தலுக்கு பின் தெரிய வரும்:
அடித்தட்டு மக்கள் அதிமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறார்கள்.
6 லட்சம் கோடி கடனில் தமிழக அரசு இருந்தாலும், வளர்ச்சி பணிகள் தொடர்கிறது.
எடப்பாடி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி கொண்டுவரப்படும்.
எடப்பாடி தொகுதியில் சாலை, குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளேன்.
* அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு:
வழக்கை கைவிடுவதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தினகரன் மனு.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சசிகலா நிலைப்பாடு என்ன?
சசிகலாவிடம் ஆலோசித்து தெரிவிப்பதாக அவரது வழக்கறிஞர் பதில்.
* ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான அரசியல் பேரவை தேர்தலில் போட்டி:
20 தொகுதிகளில் போட்டியிடப்படும் என சகாயம் அறிவிப்பு.
10 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் சகாயம்.
தமிழ்நாடு இளைஞர் கட்சியுடன் சகாயம் அரசியல் பேரவை கூட்டணி.
தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளில் போட்டி.
வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை-சகாயம்.
* நோட்டா வாக்கு தொடர்பான வழக்கில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு:
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
ஒரு தொகுதியில் நோட்டா வாக்கு அதிக அளவில் இருந்தால், தேர்தலை ரத்து செய்ய கோரி வழக்கு.
மறு தேர்தல் நடத்தும் போது, ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்-மனுதாரர்.
No comments:
Post a Comment