அக்னிப்புரட்சி இன்றைய (19.03.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (19.03.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (19.03.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 20 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.

* தஞ்சையில் மேலும் 27 மாணவிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி.

தஞ்சையில் ஏற்கெனவே 68 மாணாக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் புதிதாக 27 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

* தஞ்சை அருகே தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

* இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு:

கோலி, ரோகித், தவான், சுப்மன் கில், ஷ்ரேயஸ், சூர்யகுமார், ஹர்திக், ரிஷப், ராகுல், சாஹல், குல்தீப், க்ருனால், சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், ப்ராசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்.

* தேர்தல் மற்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் - அவரச வழக்காக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு.

* தமிழகத்தில் தபால் வாக்களிக்க மொத்தம் 2.08 லட்சம் பேர் விண்ணப்பம்;
80 வயதுக்கு மேற்பட்டோர் 1.59 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்- தலைமைத் தேர்தல் அதிகாரி.

* மக்கள் நீதி மையம் பொருளாளர் சந்திரசேகர் வீடு, அலுவலகங்கள் நடத்தப்பட்ட சோதனையில் ₹11.5 கோடி பறிமுதல் மற்றும் கணக்கில் வராத வருமானம் ₹80 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - வருமான வரித்துறையினர் அறிக்கை

* இராணுவ கேண்டீன் போல, அனைத்து பொருட்களும் விலை மலிவாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் ‘மக்கள் கேண்டீன்’ என்று தொடங்கும் திட்டம் உள்ளது; இதனை அம்மா உணவகத்துடன் ஒப்பிட வேண்டாம் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேட்டி.

* அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 -ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.

* தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெற்றது.

தற்போது வரை 4502 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

* தோப்பு வெங்கடாசலம் கட்சியில் இருந்து நீக்கம்:

பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக மனு தாக்கல் செய்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கம்.

* சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

60 வயதுக்கு மேற்பட்டோர், 45-59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - சென்னை மாநகராட்சி.

* சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்த பின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்.

தட்டாஞ்சாவடி, ஏனாம் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிடுகிறார்.

* மகாராஷ்டிர மாநிலத்தில் திரையரங்குகளில் இனி 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி:

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரா மாநில அரசு நடவடிக்கை.

திரையரங்குகள் மற்றும் நிகழ்ச்சி அரங்குகளில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி.

அனைத்து தனியார் அலுவலகங்களும் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி - மகாராஷ்டிரா அரசு.

* அசாமில் இல்லத்தரசிகளுக்கு ரூ 2,000 வழங்கப்படும் - ராகுல் காந்தி வாக்குறுதி

5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இலவசமாக 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படும்.

அசாம் தேயிலை தொழிலாளர்களுக்கு ரூ.351 தருவதாக பாஜக வாக்குறுதி தந்தது, ஆனால் கொடுத்தது ரூ.167

நான் நரேந்திர மோடி அல்ல; ஏனென்றால் நான் பொய் சொல்ல மாட்டேன் - அசாம் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி.

* ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா? பாம்பா? -முதலமைச்சர்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் ஊர்த்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா? நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன். விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்துகொண்டிருக்கிறோம் என பேசினார்.

* கூட்டணி வேட்பாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த வழக்குசென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

* தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.

இன்று ஒரே நாளில் 1087 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் கொரோனாவிற்கு 9 பேர் உயிரிழப்பு.

தற்போது 6,690 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 421 பேருக்கு கொரோனா பாதிப்பு.
15 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி.

* புதுச்சேரியில் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை:

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.

9 முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து செயல்படும் என்றும் தேவைப்பட்டால் அந்த வகுப்புகளுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages