அக்னிப்புரட்சி இன்றைய (31.03.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை
* கடலூர்: குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.
* சட்டப்பேரவை தேர்தலில் 15 வருட பழமையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது.
2017-ம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்.
* அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்:
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதால் நீக்கம்.
முன்னாள் எம்.பி., ஏழுமலை, ஈஸ்வரசாமி, நாகராஜ், ரங்கசாமி, கமலஹாசன், ஸ்ரீதர் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கம்.
* புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் புவனேஷ்வரன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை.
* போலீசாருக்கு லஞ்சம் வழங்கியதாக திமுக திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை
* அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் வங்கி கணக்கு விவரங்கள், கடவுச்சொல், ஏடிஎம் கார்டு எண், ஏடிஎம் பின், ஓடிபி போன்றவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இதுபோன்ற விவரங்களை ஒரு போதும் வங்கி கேட்காது. - CUB
* தமிழகத்தில் 20 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 - 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் - வானிலை மையம்.
* தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய புகார் : அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நிபந்தனையற்ற முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
* தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.33,392-க்கு விற்பனை; ஒரு கிராம் தங்கம் ரூ.4,174-க்கு விற்பனை.
* கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உத்தரவு.
வேலங்காடு மயானத்தில் இருந்து உடலை எடுத்து, மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* வாக்குகளை விற்பனை செய்துவிட்டு நல்ல அரசியல் தலைவர்களை, மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?
வாசுதேவநல்லூர் தொகுதியை, பொது தொகுதியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.
* தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நீட்டிப்பு.
ஏப்ரல் 4-ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு...
* தமிழகத்தில் பிரியாணி , மது பாட்டில்களுக்காக வாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் வேதனை:
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரிக் கேள்வி - பிரியாணி , மது பாட்டில்களுக்காக வாக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன - உயர்நீதிமன்றம் இலவச திட்டங்களை நிறைவேற்றுவதால் மாநிலத்தின் நிதிச்சுமை கூடுகிறது.
நிதிச்சுமையை சமாளிக்க மதுக்கடைகள் அதிகரிக்கப்படுவதாக காரணம் காட்டப்படுகின்றன -நீதிபதிகள்
அதனை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்.
* மக்களை சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது ? - நீதிபதிகள்.
சமூக நலத்திட்டங்கள் எனும் பெயரில் மக்களை சோம்பேறியாக்கும் திட்டங்களை அறிவிக்கின்றனர் - நீதிபதிகள்
தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் முறையாக வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா - நீதிபதிகள்.
* சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்கள் தொடர்பான அறிக்கையை சீலிட்ட உரையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது நிபுணர் குழு.
85 விவசாய சங்கங்களுடன் ஆலோசித்த பின்னர் அறிக்கை தயாரித்துள்ளதாக நிபுணர் குழு தகவல்.
* மத்திய மண்டலம் ஐஜி, மேற்கு மண்டலம் ஐஜி இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு.
திருச்சி மாநகர காவல் ஆணையராக அருணை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.
* கேஸ் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைப்பு - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு.
விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் நடவடிக்கை.
* பான் - ஆதார் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை
இணைக்க வரும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு.
No comments:
Post a Comment