அக்னிப்புரட்சி இன்றைய (05.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை.
* வேலூர்: தேர்தல் பணி மேற்கொள்ள சென்ற பறக்கும்படையினரின் கார் விபத்துக்குள்ளானது.
கார் மீது லாரி மோதியதில் பெண் போலீஸ் அதிகாரி மாலதி சம்பவ இடத்திலேயே பலி.
* சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து.
துரைசாமிபுரத்தில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
சம்பவ இடத்திற்கு விரைந்தது தீயணைப்பு துறை.
* முதல் முறையாக தேர்தல் பணியில் சுகாதார பணியாளர்களை ஈடுபடுத்துகிறது தேர்தல் ஆணையம்:
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 சுகாதாரப் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துகிறது தேர்தல் ஆணையம்.
மாஸ்க், சானிடைசர், கவச உடை உள்ளிட்டவை அடங்கிய கிட் வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று உறுதியானவர்கள் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வந்து வாக்களிக்க ஏற்பாடு- சுகாதாரத்துறை செயலாளர்.
* புதுச்சேரி ஏனாம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் துர்கா பிரசாத் பெம்மாடி மாயமான விவகாரம்:
மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடிய நிலையில் சாலையோரம் மீட்பு.
காக்கிநாடா பகுதியில் உள்ள அச்சம்பேட்ட சாலையோரத்தில் மயங்கிய நிலையில் மீட்பு.
காக்கிநாடா அரசு மருத்துவமனையில் ஏனாம் சுயேட்சை வேட்பாளருக்கு சிகிச்சை.
ஏனாம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் கடந்த 1ஆம் தேதி காணாமல் போனதாக புகார். சுயேட்சை வேட்பாளர் கடத்தப்பட்டாரா என போலீசார் விசாரணை.
* தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் வரும் 6-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு என்ற தகவலை நம்பவேண்டாம் - ராதாகிருஷ்ணன்.
அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் - ராதாகிருஷ்ணன்.
* பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் மருத்துவமனையில் அனுமதி:
கொரோனா தொற்று காரணமாக வீட்டுத் தனிமையில் இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
* சத்தீஸ்கர் : சுக்மா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி.
* மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான புகார் தொடர்பாக 15 நாட்களில் சிபிஐ விசாரணை நடத்த மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* டெல்லி : ராஜிந்தர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காது:
புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான பூர்வா கார்க் விளக்கம்.
மக்கள் கூட்டமாக சென்று வாக்களிக்கலாம் - ஆட்சியர் பூர்வா கார்க். சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வில்லை.
144 தடையை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி மார்க்சிஸ்ட் கட்சி வழக்கு.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆட்சியர் பூர்வா கார்க் விளக்கம்.
* சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் என தகவல்:
போயஸ் இல்ல முகவரியில் சசிகலாவுக்கு வாக்குரிமை இருந்த நிலையில், போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதால் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்.
தற்போது தி.நகர் இல்லத்தில் உள்ள முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்க விண்ணப்பிக்கவில்லை என தகவல்.
* பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆளுநர் எழுதிய கடித நகலை அளிக்கக் கோரி அற்புதம்மாள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:
தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
* சென்னைஎ தலைமை செயலகத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக ஆலோசனை என தகவல்.
கல்வித்துறை ஆணையர் வெங்கடேஷ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்பு.
* புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த தேர்தல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் இறுதிக்கெடு.
புதுச்சேரி வார்டு மறுவரையறை பணிகளையும் 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தமால் இருப்பது வருந்தத்தக்கது - உச்சநீதிமன்றம்.
* தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை 11 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் - வானிலை மையம்.
* தமிழகத்தில் எந்த இடத்திலும் தேர்தல் ரத்து இல்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.
தமிழகத்தில் சில தொகுதிகளில் தேர்தல் ரத்து என்ற தகவலில் உண்மையில்லை.
தற்போதுவரை தேர்தல் ரத்து தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.
234 தொகுதிகளிலும் திட்டமிட்டப்படி நாளை தேர்தல் நடைபெறும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...
வாக்களிக்க ஏதுவாக, நாளை அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்.
ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை - தொழிலாளர் நல ஆணையம்.
* வரும் 8ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆலோசனை. மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
No comments:
Post a Comment