அக்னிப்புரட்சி இன்றைய (09.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை.
* 14வது ஐபிஎல் டி20 தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
இன்று மும்பை-பெங்களூரு அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.
💥 சீருடை சர்ச்சை: இலங்கை யாழ்ப்பாண நகர்மன்றத் தலைவர் மணிவண்ணனை கைது செய்தது இலங்கை பயங்கரவாத புலனாய்வு பிரிவு(TID)
யாழ்ப்பாண நகராட்சி ஊழியர்களின் சீருடை விடுதலைப் புலிகளின் காவல் படையினரை ஒத்து இருந்ததாக குற்றம் சாட்டி இந்த கைது நடைபெற்றுள்ளது.
எனினும் மணிவண்ணனின் தரப்பு யாழ்ப்பாண ஊழியர்கள் சீருடை கொழும்பு நகராட்சி ஊழியர்களின் சீருடை போன்றே வடிவமைக்கப்பட்டது என மறுப்பு தெரிவித்துள்ளது.
* பன்னிரண்டாம் வகுப்பு ஆய்வகத்தேர்வு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வரும் 16-ம் தேதி முதல் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
ஆய்வகங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி இட வசதி உறுதி செய்யப்பட வேண்டும்.
Pipette-ஐ பயன்படுத்தக் கூடாது.
* தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக திருத்தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருத்தேரோட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் ரத்து.
* புதிய உச்சத்தில் தினசரி கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் புதிதாக 1,31,968 பேர் பாதித்துள்ளனர்.
இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,60,542 ஆக உயர்ந்தது.
ஒரே நாளில் 780 பேர் இறந்துள்ளனர்.
இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,67,642 ஆக உயர்ந்தது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 61,899 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,13,292 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,79,608 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 91.22% ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தோர் விகிதம் 1.28% ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் 7.50% ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 9,43,34,262 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 36,91,511 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து, ரூ.35,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 22 உயர்ந்து, ரூ.4,387- க்கு விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.72.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* புதுச்சேரி: கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு புதுச்சேரி உணவகங்களில் 10% தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
10% தள்ளுபடி என புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.
* மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்.
சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதாம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு.
* தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
மதுரையை சேர்ந்த அபிஷ்குமார் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவு.
* தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்.
கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி.
சட்டப்படி தேவைப்படும் தகுதியை கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்க வில்லை. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து.
* வேளச்சேரியில் விதிமீறல் - தேர்தல் ஆணையம் தகவல்.
இரு சக்கர வாகனத்தில் விவிபேட் இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது விதிமீறல்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம்.
இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவு.
வேளச்சேரி வாக்குச்சாவடியில் முதல் 50 நிமிடங்கள் இந்த விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
விவிபேட் இயந்திரம் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை.
* இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் மறைவு.
99 வயதான பிலிப், உடல் நலக்குறைவால் உயிரிழப்பு.
வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக, ராணி எலிசபெத் தகவல்.
* “இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு" - தமிழக அரசு:
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும்.
புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில் அரசு எச்சரிக்கை.
கொரோனாவை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
கொரோனா 2-வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - தமிழக அரசு.
கடந்த வாரம் முதல் சராசரி நோய்த்தொற்று 3,900 ஆக உயர்ந்துள்ளது - தமிழக அரசு.
மார்ச் 16 முதல் இதுவரை விதிகளை மீறியவர்களிடம் ரூ.2.88 கோடி அபராதம் வசூல்.
தமிழகத்தில் இதுவரை 34.87 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 95.55% பேர் குணமடைந்துள்ளனர்.
ஏப்ரல் 14 முதல் 16 வரை 'தடுப்பூசி திருவிழா' நடத்த முடிவு.
தகுதி வாய்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு.
முயற்சிகள் பலனளிக்காவிட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்.
மாநிலம் முழுவதும் தினமும் 3000 காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு.
கொரோனா அதிகரிப்பால் டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவு -டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
சேலம் அரசு மருத்துவமனையில் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதல்வர்.
தமிழகத்தில் 34 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் போதுமான அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளன.
தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
மக்கள் கொரோனா நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை
மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு.
கெய்ரோ: எகிப்து நாட்டின் லக்ஸர் பகுதியில் மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டு வந்த 3000 ஆண்டுகள் பழமையான இழந்த தங்க நகரத்தை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
The Seithikathir is now on Telegram!
JOIN US: https://t.me/Seithikathir
எகிப்து நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறை நிபுணர் ஸாஹி ஹவாஸ், நாட்டின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, இந்த மிகப் பழமையான நகரத்தை கண்டுபிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நகரம், ஏதெனின் எழுச்சி என்றும் அறியப்படுகிறது. இந்த நகரத்தை மூன்றாம் அமென்ஹோடெப் மற்றும் மன்னர் துதன்கமுன் ஆகியோரது ஆண்டுள்ளனர்.
ஏற்கனவே, ஹேரெம்ஹேப் மற்றும் ஆயி கோயில்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து துதன்கமுன் கோயிலும் இங்கு அமைந்திருக்க வேண்டும் என்ற கணிப்பில், ஏராளமான வெளிநாட்டுக் குழுக்கள் இந்தக் கோயிலை அகழ்வாராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டன. ஆனால், அப்போதெல்லாம் இந்த நகரத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment