அக்னிப்புரட்சி இன்றைய (10.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை.
* தமிழகம் முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இன்று முதல் முககவசம் கட்டாயம்.
முககவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது - தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம்.
* நாடு முழுவதும் ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 794 பேர் கொரோனாவுக்கு பலி
இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை -1,32,05,926
தற்போது கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை -10,46,631
* 9 ஐ.ஏ.எஸ், அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு தர தலைமைச் செயலாளருக்கு தகவல் ஆணையர் பரிந்துரை.
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் குளறுபடி - தலைவர்களாக இருந்த 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அணுப்ப மாநில தகவல் ஆணையர் பரிந்துரை.
2011-20 வரை உதவிப்பேராசியர் தேர்வில் முறைகேடு மற்றும் ஒரே தவறு மீண்டும் மீண்டும் நடந்திருப்பது கண்டுபிடிப்பு.
* குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து அரசு அலுவலகங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தலைவர்கள் புகைப்படம் வைக்க அரசாணை கட்டாயப்படுத்தவில்லை- அரசு தரப்பு.
அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
* தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது- சுகாதாரத்துறை செயலாளர்.
இந்திய பாதிப்பில் 3 சதவிகித கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது- ராதாகிருஷ்ணன்.
கொரோனாவில் இருந்து மீள்வதற்கு முகக்கவசம் அணிவதை தவிர நேருவழியில்லை -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
* சென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
தனியார், அரசு கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தீவிரம்.
* உரிய ஒப்புதல்கள் இல்லாத தண்ணீர் லாரிகள் இயங்க அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்.
ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதாக கூறி, நடவடிக்கை எடுப்பதை தடுக்க கோரி வழக்கு.
தென் சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு முடித்து வைப்பு.
* தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை- மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்.
ஏற்கனவே அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் - தமிழக அரசு.
பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை.
* தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6000-ஐ நெருங்கியது.
தமிழகத்தில் மேலும் 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,26,816 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,952 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,76,257 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,886 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் 14 தனியார் மருத்துவமனையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1752 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,61,072பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2,04,31,588 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 84,546 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 37,673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,59,486 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,652 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,67,294 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,337 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.
* கடலூர் மாவட்ட அதிமுக எம்எல்ஏ சந்தியா பன்னீர்செல்வம், பன்னீர்செல்வம், பெருமாள், மார்ட்டின் லூயிஸ் (எ) பாபு, சாவுந்தர், இராம் குமார் உள்ளிட்ட 6 நிர்வாகிகள் நீக்கம் : ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு.
* சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைகளில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மக்கள் கூட தடை - தமிழக அரசு.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை வழிபட அனுமதி.
இரவு 8 மணி வரை வழிபடலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நேரம் அதிகரிப்பு.
வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
* புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களை தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி திரையிடலாம்.
புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி - தமிழக அரசு.
No comments:
Post a Comment