அக்னிப்புரட்சி இன்றைய (15.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் 15 காசுகள் குறைந்து லிட்டர் 92.43 ரூபாயாகவும், டீசல் 13 காசுகள் குறைந்து லிட்டர் 85.75 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
* முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்தது.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து ஒரு முட்டை ரூ.4.75 க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு முட்டையின் விலை 75 காசுகள் உயர்ந்துள்ளது.
கோடைகாலம் என்பதால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
* இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 93,528 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 1,038 பேர் உயிரிழப்பு.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பா?
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒத்திவைப்பதா என்பது குறித்து இன்று காலை ஆலோசனை என தகவல்.
* கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் - தமிழக அரசு.
அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
* இந்தியன் - 2 படத்தை முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை கோரிய வழக்கு
மேல்முறையீடு செய்ய தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.
* தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறி சென்று விட்டது- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
போதிய அளவு கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டம் - தமிழக அரசு.
* கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை மறு அடக்கம் செய்ய தடை
மாநகராட்சி ஆணையர் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கொரோனாவால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது சாத்தியமல்ல உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல்.
சென்னை மாநகராட்சி விளக்கத்தை ஏற்று, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
* மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.
* உத்தரபிரதேசத்தில் மே 15 வரை பள்ளிகள் மூடல்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 20 வரை ஒத்திவைப்பு - உ.பி. அரசு.
* கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதுகலை நீட் தேர்வு நடத்துவதற்கு இது சரியான நேரமா?
பிரதமர் மோடி மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி.
* டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.
வணிக வளாகம், அருங்காட்சியகம், உடற்பயிற்சி கூடங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
திரையரங்குகளில் 30% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி - அரவிந்த் கெஜ்ரிவால்.
* தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கலாமா? அல்லது நடத்தலாமா? ஆலோசனை கூட்டம் துவங்கியது.
தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை.
ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்பு.
சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைப்பு.
ஆலோசனைக்கு பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.
* தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.
தமிழகத்துக்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதை அரசு தீவிரப்படுத்தி வரும் சூழலில் கூடுதல் மருந்து கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை.
தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்- மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு.
45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
தடுப்பூசி இலக்கை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் - சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல்.
* தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட உத்தரவு.
அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவு.
கொரணோ தடுப்பு நடவடிக்கையாக மாமல்லபுரம், தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கிய வரலாற்றுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை மே 15 வரை மூட மத்திய தொல்லியல்துறை உத்தரவு!
கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு மத்திய தொல்லியல் துறை நடவடிக்கை.
* ஏப்ரல் 18ல் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.
கொரோனா பரவல் காரணமாக, மருத்துவ மாணவர்களின் நலன் கருதி தேர்வு ஒத்திவைப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.
முதுநிலை நீட் தேர்விற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.
* தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 7,987 பேர் பாதிப்பு: 29 பேர் பலி.
தமிழகத்தில் மேலும் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,62,935 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 4,176 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,91,839 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,999 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் 15; தனியார் மருத்துவமனையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 2,558 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,74,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2,08,79,495 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 95,387 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 58,097 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
💥SBI வங்கியில் வேளாண் நகைக் கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது
இதுவரையில் 8.25% ஆண்டு வட்டியாக பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது 1 விழுக்காடு வட்டி குறைத்து 7.25% ஆக பெறப்பட உள்ளது. இந்த சலுகை சூன் மாதம் 30 வரையில் செயலில் இருக்கும் என அறிவிப்பு.
* ஏப்ரல் 30ஆம் தேதி வரை சென்னையில் ஆர்பாட்டம், போராட்டம், பொது கூட்டங்கள் நடத்த தடை!
* தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரணோ தொற்று உறுதி.
No comments:
Post a Comment