அக்னிப்புரட்சி இன்றைய (16.04.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.04.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.04.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை.

* தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது.

இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது.

* தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை.

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை.

* இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவு:

புதிய உச்சமாக நாடு முழுவதும் ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா.

இந்தியாவில் ஒரே நாளில் 1,185 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு.
1,18,302 பேர் டிஸ்சார்ஜ்.

* உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 2.16 லட்சம் பேருக்கும் நேற்பட்டோருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

* மதுக் கடைகளால் பாதிக்கப்பட்டோர் அதனை எதிர்த்து  போராட உரிமை உள்ளது எனக் கூறி புதிதாக தங்கள் பகுதியில் வரவிருந்த TASMAC கடைகள் மீது கல்லெறிந்து போராடியதாக பெண்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை  முற்றிலுமாக நீக்கி தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதிமன்றம்

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.35,424க்கு விற்பனை!
கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.4,428க்கு விற்பனை!

* நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு.

பிரபல நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு!
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

* பாகிஸ்தானில் சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்கி அரசு உத்தரவு.

தெரீக் -இ-லப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சியை அரசு தடை செய்ததை தொடர்ந்து உள்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்வதால் நடவடிக்கை.

* வாக்கு எண்ணும் மையங்களில் லாரிகள் செல்லும் நிகழ்வுகளால் சர்ச்சை - தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து திமுக நிர்வாகிகள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, பொன்முடி புகார் மனு.

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்

வாக்கு எண்ணும் மையங்களில் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் விதிமீறல் என திமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு.

* துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் ஆணையம் என்னை விசாரிக்க முடியாது.

நீதியரசர் கலையரசன் தலைமையிலான ஆணையம் செல்லத்தக்கதல்ல.

அரியர் ஆல் பாஸ் முடிவிற்கு ஒத்துக்கொள்ளாததால் என்னை பதவி நீக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது -  உயர்நீதிமன்றத்தில் சூரப்பா வாதம்.

* அமெரிக்கா  Indianapolis மாகாணத்தில் உள்ள FedEx நிறுவன வளாகத்தில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது

* இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வெருவித் தொற்றில் இருந்து முழுமையாக  மீண்ட நிலையில் இரண்டாவது முறையாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி தீபா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இரண்டு நாள்களுக்கு முன் கொரணோ தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில்......!

கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக பெங்களூரு ராமையா மருத்துவமனையில் அனுமதி!

* டாஸ்மாக்கிற்கு எதிராக போராட மக்களுக்கு உரிமை உண்டு.

டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள், அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

சேலம் கருமலைக்கூடலில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் 10 பேர் மீது பதிவான வழக்குகள் ரத்து.

* நடிகர் விவேக்கிற்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை.

திடீர் நெஞ்சு வலியால் வடபழனியில் உள்ள
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.

வீட்டில் இருந்தபோது விவேக்கிற்கு சோர்வு ஏற்பட்டது - உடனடியாக மருத்துவமனையில் அனுமதி.

கர்நாடக முதல்வருக்கு கொரோனா:
2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* புதுச்சேரி பல்கலை.யின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு.

வரும் 19ஆம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு.

கொரோனா காரணமாக செய்முறை, எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு - புதுச்சேரி பல்கலை. தேர்வுத்துறை.

* கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக தலைமைச் செயலாளருக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்.

* நடிகர் விவேக் எக்மோ உதவியுடன் ஆபத்தான நிலையில் தீவிர  சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரது மாரடைப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" - #SIMS மருத்துவமனை விளக்கம்

நடிகர் விவேக்கின் உடல்நலக்குறைவுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல - மருத்துவமனை விளக்கம்.

நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து இதயக் குழாய் அடைப்பு நீக்கப்பட்டது.

எக்மோ உதவியுடன் உள்ள விவேக்கின் உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டியுள்ளது - மருத்துவமனை விளக்கம்.

* நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்.

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக சிபிஐ தகவல்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக நீரவ் மோடி மீது வழக்கு.

* மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகருக்கு கொரணோ தொற்று உறுதி!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரணோ தொற்று உறுதி!

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 33 பேர் உயிரிழப்பு!

சென்னையில் 2636 பேருக்கு தொற்று பாதிப்பு! 61500 பேர் சிகிச்சையில் உள்ளனர்!

* கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் செய்யப்பட்ட தாயகட்டை, தொடக்க கால உழவு கருவி கண்டுபிடிப்பு

* கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளம்,புயல் உள்ளிட்ட பேரிடர் அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது

இதில் அதிக உயிரிழப்பு ஏற்படுத்திய நிகழ்வுகளில் 2013 உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு அடுத்து 2015 சென்னை வெள்ளம் 2 வது இடத்தில் உள்ளது

இந்த வெள்ளத்தில் மட்டும் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த வெள்ளத்தால் மட்டும் 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  நகர்மயமாக்கல், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு,   பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிப்பு முதலியவை இதற்கு முதன்மையான  காரணங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages