அக்னிப்புரட்சி இன்றைய 17.04.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய 17.04.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய 17.04.2021) முக்கிய செய்திகள்.

* மறைந்த நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கம் இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

நடிகர் விவேக் உடலுக்கு திரை உலகத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

* நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்.

நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தனது ஈடு இணையற்ற கலை சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்துக்கு பெருமை சேர்ந்தவர், நடிகர் விவேக். - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்.

* சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது.

பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்; கருணாநிதியிடம் தனி அன்பு கொண்டவர், நடிகர் விவேக் - திமுக தலைவர் ஸ்டாலின்.

* பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர், நடிகர் விவேக்.

நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர் - வைகோ.

* சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

‘சிவாஜி' படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் - நடிகர் ரஜினிகாந்த்.

* தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர்.
மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர் - பாமக நிறுவனர் இராமதாசு அய்யா.

* சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராக மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்தவர் நடிகர் விவேக் - தமிழிசை சௌந்த‌ர‌ராஜன்.

* நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது - விசிக தலைவர் திருமாவளவன்

* நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக்.

மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு-கமல்ஹாசன்.

* நடிகர் விவேக் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்:

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் எனக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் வைத்தவர் விவேக் - மோடி.

* நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு.

தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம்.

சட்டப்பேரவை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது தமிழக அரசு.

* நடிகர் விவேக் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - தமிழக அரசு.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அனுமதி.

* நடிகர் விவேக் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

விருகம்பாக்கத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்பு.

நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை.

விவேக்கின் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இறுதி சடங்கு.

நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை.

* பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை.

பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார் பிரதமர் மோடி.

கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை.

* நிறைவடைந்தது ஜனங்களின் கலைஞன் பூமிப் பயணம்!

சின்னக் கலைவாணர் என்றும், ஜனங்களின் கலைஞன் என்றும் தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக் உடல் தகனம் விருகம்பாக்கம், மேட்டு குப்பம் மின் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் நடந்தது.

இறுதிச் சடங்குகளை அவரது மகள் தேஜஸ்வினி செய்தார். ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றார் விவேக்!

* வேகம் எடுக்கும் இரண்டாவது அலை :
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9
ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 9,344 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரேநாளில் 39 பேர் உயிரிழப்பு .

* நடிகர் விவேக் பேசிய கடைசி வார்த்தைகள்
பொது சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்த நடிகர் விவேக்கின் கடைசி வார்த்தைகளும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தான் இருந்தது நன்றி: BBC NEWS தமிழ்

* மகாராஷ்டிராவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா - ஒரே நாளில் 67,100 பேருக்கு புதிதாக தொற்று உறுதி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages