அக்னிப்புரட்சி இன்றைய (19.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.
💥ராஜஸ்தான் மாநிலத்தில் "அனுஷாசன் பக்வார" என்ற பெயரில் மே 3 தேதி வரை முழு ஊரடங்கு செயலாக்கம்.
* அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டம்.
ஒருவரி கேள்வி பதில் போல் இல்லாமல், விரிவாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டம் என தகவல்.
* சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி அனுமதி
குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்.
இருதய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முரளிதரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது -அப்போலோ மருத்துவமனை.
* கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர் அமைக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்.
* கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
நோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை பற்றி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதனால் கூட்டத்திற்கு பின்னர் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா அல்லது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
* டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டெல்லியில் இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
* கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடத்த உத்தரவிட முடியாது.
கொரோனா பரவல் மிகத்தீவிரமாக பரவி வரும் சூழலில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்படலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.
மின்னணு வாக்குபதிவு இயந்திரம் என்பது கால்குலேட்டர் போன்றது: எந்த சிக்னல் கொண்டும் அதை இயக்க முடியாது.
* சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கு.
சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு தாக்கல் செய்த மனுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு.
* நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்.
“தடுப்பூசியை கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதான் சொன்னேன்” -முன்ஜாமீன் கோரும் மன்சூர் அலிகான்.
* தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை; நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்......
மகாராஷ்டிரா மாநிலம் வாங்கனி ரயில் நிலையத்தில் ரயில் வரும்போது தண்டவாளத்தில் தவறிவிழுந்த குழந்தையை, ரயில்வே ஊழியர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.......
* பிளஸ் 2 தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்கு முன்பாக அட்டவணை அறிவிக்கப்படும்- தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
கொரோனா காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மே 5 ஆம் தேதி நடைபெற இருந்த பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு.
* டாஸ்மாக் கடைகளுக்கான நேரம் நாளை முதல் குறைப்பு
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும்.
டாஸ்மாக் கடைகளில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்கள் விற்பனை.
டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு - 2 வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் கடையின் உள்ளே 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என கட்டுப்பாடுகள்.
* கொரோனா பரவலால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம் 2வது முறையாக ரத்து.
இருநாடுகளிடையே காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிப்பு.
* கொரோனா பரவல் தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை.
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன், காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனையில் பங்கேற்பு.
* கடலூர்: குமளங்குளம் கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற ஜெயலட்சுமி பதவியேற்பதற்கான நடைமுறைகளை 2 வாரத்தில் முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 நோயாளிகள் பலி.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் திடீர் உயிரிழப்பு.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்.
வேலூர்: ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது முற்றிலும் தவறான தகவல் என்று வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் விளக்கம்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவகாமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 நோயாளிகள் உயிரிழக்கவில்லை என ஆட்சியர் கூறியுள்ளார்.
* தமிழகத்தில் 11 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு.
இன்று 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 6,172 பேர் டிஸ்சார்ஜ், 44 பேர் உயிரிழப்பு.
* முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றால் பாதிப்பு ; மருத்துவமனையில் அனுமதி
* இனி முக மறைப்பு அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும்
TASMAC திடீர் அறிவிப்பு
* புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் - துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவிப்பு.
இரவு 8 மணிவரை மட்டும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்;
8 மணிக்கு மேல் பார்சலுக்கு மட்டும் அனுமதி- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
* டாஸ்மாக்கில் மீண்டும் டோக்கன் முறை:
நாளை முதல் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும்.
மாலை 4 மணிவரை டோக்கன்கள் வழங்கப்படும்- டாஸ்மாக் நிர்வாகம்.
* மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு.
நாடு முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - மே 1 முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு.
* மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.
இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிப்பு.
No comments:
Post a Comment