அக்னிப்புரட்சி இன்றைய (21.04.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.04.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.04.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.

* குழந்தைகள் உயிரிழப்பு தாய் தற்கொலை:

வேலூர் மாவட்டம் லத்தேரியில் பட்டாசுக் கடை தீ விபத்தில் தந்தை மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்.

இரண்டு குழந்தைகளின் தாய் வித்யாலட்சுமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

* மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்:

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டார்.

அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கமீலா நாசரை விடுவிப்பதாக பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.

கமீலா சென்னை மண்டல கட்டமைப்பு மாநில செயலாளர் பதவியிலிருந்து விலகிய நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

* 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு" -பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்.

* தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 472 அதிகரித்து சவரன் ஒன்று ரூ. 36 ஆயிரத்தை தாண்டியது.

* இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது.

இந்தியாவில்  கொரோனா மரணங்கள் புதிய உச்சம்  தொட்டது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 2023 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனாவிற்கு மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,82553 பேராக உயர்வு.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,95,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1,67,457 பேர் குணமடைந்துள்ளனர்.

* தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு.

ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில், நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் - வேதாந்தா நிறுவனம்.

* டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் நெருக்கடி தொடர்கிறது - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லிக்கு அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு உதவ வேண்டும்

சில மணிநேரத்திற்கு மட்டுமே போதுமான அளவில் ஆக்சிஜன் உள்ளது டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் உருக்கமான பதிவு

* இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக காணொலி மூலம் ஆலோசனை.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

* கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம்.

ஒரு டோஸ் மாநில அரசுக்கு ரூ.400 க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 க்கும் விற்பனை.

உற்பத்தியில் 50% மாநில அரசுக்கும் 50% தனியார் மருத்துவமனைகளுக்கும் தரப்படும் -சீரம் நிறுவனம்.

* தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 45 மெட்ரிக் டன் அளவு அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப மைய அரசு முடிவெடுத்துள்ளது - விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம்.

* மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் வாயு கசிவால் 22 பேர் பலி.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜனை நிரப்பியபோது வாயுக்கசிவு; 22 பேர் உயிரிழப்பு.

170 நோயாளிகள் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நிர்வாகத்தில் உலக மகா நிபுணர் என கூறப்பட்ட பிரதமர் மோடி கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்தது ஏன்?

தட்டுப்பாடு நிலவும் சூழலில் 93,000 மெட்ரின் டன் ஆக்சிஜனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம் என்ற அவப்பெயரை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது - மு.க.ஸ்டாலின்.

45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளது வேதனை அளிக்கிறது - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* மின் இணைப்பு கொடுப்பதற்கு ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது.

கடலூர்: திட்டக்குடி அருகே அடரி கிராமத்தில் மின்வாரிய வணிக ஆய்வாளர் ரவி அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் ரைஸ் மில்லுக்கு புதிய மின் இணைப்பு வழங்க ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கடலூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மெல்வின்ராஜசிங் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

* நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு காரணமாக 22 நோயாளிகள் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.

உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் - பிரதமர் மோடி.

* இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு.

உள்நாட்டு தயாரிப்பான பயோலாஜிக்கல்-இ என்ற தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால்.

* மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி:

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

* மத்திய சிறைச்சாலையில் 41 கைதிகள், 3 வார்டன்களுக்கு கரோனா.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதிகள் 41 பேருக்கும், சிறை வார்டன்கள் 3 பேருக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 11,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்தது.

இன்று ஒரேநாளில் 11,681 பேருக்கு தொற்று உறுதி; 7,071 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 53 பேர் உயிரிழப்பு.

* மத்திய அரசுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்- கெஜ்ரிவால்.

டெல்லிக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதற்கான மத்திய அரசுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages