அக்னிப்புரட்சி இன்றைய (24.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை
* உலகிலேயே கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தான் அதிக விலைக்கு (₹600) விற்கப்படுவதாக தகவல்
*சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி இல்லை
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது, அப்படி எந்த கட்டமைப்பும் இல்லை
வெளியிலிருந்துதான் ஆக்சிஜன் பெறப்படுகிறது! - மருத்துவமனையின் தலைவர் தேரணிராஜன் தகவல்.
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொள்ளும் வசதியை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நிறுவியதாக வதந்தி பரவி வந்தது.
* தமிழகத்தில் ஏழு மாதங்களுக்கு பிறகு நாளை முழு ஊரடங்கு:
இன்று இரவு 10 மணி முதல் திங்கள் காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது.
முழு ஊரடங்கை முன்னிட்டு 16 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே.
* எம்டி. எம்எஸ். மருத்துவ படிப்புகளுக்கான ஐஎன்ஐ- செட் நுழைவு தேர்வு ஒத்திவைப்பு - எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தேர்வு ஒத்திவைப்பு என அறிவிப்பு.
* டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் நோயாளிகள் 20 பேர் உயிரிழப்பு. அரைமணி நேரத்தில் ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்பதால், 200 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்.
- மருத்துவமனை நிர்வாகம் தகவல்..
* மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாகவே தரப்படும் என மத்திய அரசு அரசு அறிவிப்பு...
* மேலும் சில கட்டுப்பாடுகள் - இன்று அறிவிப்பு?
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகள் வெளியாகிறது
இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என தகவல்
பிரதமர் மோடியுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி அறிவிப்பு வெளியாகிறது
* ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சரை சந்தித்து பேசினார் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன்
ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் சில கட்டுப்பாடுகள் அமலாகும் என தகவல்
* கோவேக்சின் 2 லட்சம் டோஸ்கள், கோவிஷீல்டு 2 லட்சம் டோஸ்கள் வந்தன. தமிழகம் வந்த தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு அனுப்ப ஏற்பாடு.
* கொரோனா தடுப்பூசி உயிரை காப்பாற்றும், தடுப்பூசி அனைவரும் செலுத்திக்கொள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்.
* கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.
வரும் வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என மத்திய அரசு தகவல்.
மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை இதுதான் நிதர்சனம் - மத்திய அரசு.
* ஆக்ஸிஜன் இல்லையெனில் டெல்லி முழுமையாக சீரழிந்துவிடும் - டெல்லி அரசு.
480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்காவிட்டால் 24 மணி நேரத்தில் நிலைமை சீரழிந்துவிடும்.
ஆக்சிஜன் வழங்குவதற்கான உறுதியை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தரவேண்டும் - டெல்லி அரசு.
* காளையார்கோயில் அருகே கார் விபத்துக்குள்ளானதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி காயம்.
இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது மோதாமலிருக்க காரை திருப்பியபோது விபத்து.
* போலீஸ் பாதுகாப்பு கோரும் டெல்லி மருத்துவமனைகள்
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலரையும் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய இருக்கின்றோம் இதனால் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதம்
ஆக்சிஜன் சப்ளையே தடுக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம்- டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள்.
ஆக்சிஜன் சப்ளையே தடுக்கும் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்.
ஆக்சிஜன் சப்ளையே தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை டெல்லி அரசு எங்களிடம் உதாரணமாகக் காட்டினால் போதும் அந்த அதிகாரிகளை தூக்கில் போடுவோம்- டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை.
* கூடுதல் பாதுகாப்பு கோரும் மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி ரத்து.
கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியையும் ரத்து செய்தது மத்திய அரசு.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு.
* மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களை தீர்க்க 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
104 என்ற எண்ணில் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் அழைக்கலாம் - தமிழக அரசு
* தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாக மூடல்.
மினி கிளினிக்குகளில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு.
கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என தகவல்.
* கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு:
26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
ஏப்.26ஆம் தேதி முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை - தமிழக அரசு.
பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை.
சென்னை உள்பட மாநகராட்சிகளில், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.
புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம்.
உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி - அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க 50 பேர் மட்டுமே அனுமதி.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி - தமிழக அரசு.
இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.
கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை.
சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி.
ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம் - தமிழக அரசு.
அனைத்து மின் வணிக சேவைகள் (e-commerce) வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம் - தமிழக அரசு.
பணிக்கு செல்லும் பணியாளர்கள், பணிக்குச் சென்று வருகையில் தங்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையை தவறாமல் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து தொழில் நிறுவனங்களும் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
💥புதிய கல்விக்கொள்கை நேபாளி, வங்காளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் மொழிப்பெயர்ப்பு வெளியிடப்படவில்லை.
* மே 1 முதல் புதிய தடுப்பூசி தடந்தகை (strategy): மாநில அரசுகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது நடுவண் அரசு
* தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நெஞ்சுவலி காரணமாக சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
* தமிழகத்தில் 15 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா தொற்று
இன்று 14,842 பேருக்கு புதியதாக தொற்று உறுதி; 9,142 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 80 பேர் உயிரிழப்பு
சென்னையில் 4086 பேருக்கு இன்று கொரோனா உறுதி
* செங்கல்பட்டை அடுத்த மறைமலை நகரில் அதிமுக பிரமுகர் திருமாறன் வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை.
வெடிகுண்டு வீசியவர் திருமாறன் உடன் பாதுகாப்புக்கு இருந்த போலீசாரால் சுட்டுக்கொலை; தப்பி ஒடிய 3 பேருக்கு வலைவீச்சு.
கோவிலுக்கு சென்று திரும்பும் போது திருமாறன் மீது மர்மகும்பல் வெடிகுண்டு வீச்சு; திருமாறன் இறந்த நிலையில் மனைவிக்கு தீவிர சிகிச்சை.
ரியல் எஸ்டேட் அதிபரான திருமாறன் உயிருக்கு ஆபத்து இருந்ததால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
* இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசியான கோவாக்சிக்கான விலை நிர்ணயம்
அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200ஆக விலை நிர்ணயம்
* தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு தொடங்கியது. இரவு 10 மணி தொடங்கி திங்கட்கிழமை அதிகாலை வரை ஊரடங்கு நீடிக்கும்.
No comments:
Post a Comment