அக்னிப்புரட்சி இன்றைய 25.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.
* சென்னையில் காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஒரு மணி நேர இடைவெளியில் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு.
சென்னையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இன்று 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுக்கிறது.
* நாட்டில் நிலவும் மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு IPL குறித்த செய்திகள் தங்கள் நாளிதழில் இடம்பெறாது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவிப்பு
💥உடல்நலக் குறைவால் உச்சநீதிமன்ற நீதியரசர் மோகன் சந்தானகவுடர் காலமானார்.
* தற்போது அமலில் இருக்கும் இலவச தடுப்பூசி திட்டம் தொடரும்- ‘மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு
"மே 1ஆம் தேதிக்கு பிறகு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி"
தடுப்பூசி தொடர்பாக தவறான செய்திகளை யாரும் பதிவிட வேண்டாம் - பிரதமர்
"கொரோனா குறித்த தகவல்களை சரியான நபரிடம் அறியலாம்"
* தமிழகத்தில் நாளை முதல் ஏப்.30 வரை வங்கி சேவை நேரம் குறைப்பு.
நாளை முதல் வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிப்பு.
* இந்தியாவில் 3-வது நாளாக 3 லட்சத்தை தாண்டும் கொரோனா:
புதிதாக 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை 69 லட்சத்து 60 ஆயிரத்து 172 ஆக உயர்ந்தது.
புதிதாக 2 ஆயிரத்து 767 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்ச்த்து 92 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 113 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை 40 லட்சத்து 85 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 26 லட்சத்து 82 ஆயிரத்து 751 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 83.05% ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.13% ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 15.82% ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 லட்சத்து 36 ஆயிரத்து 612 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டின் இதுவரை 14 கோடியை 09 லட்சத்து 16 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
* டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு
மே 3ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கை நீட்டித்து கெஜ்ரிவால் உத்தரவு
நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு.
* நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவு:
மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பி.எம். கேர் நிதி ஒதுக்கீடு.
* மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் மிக விரைவில் அமைக்கப்படும்.
மருத்துவமனைகளுக்கு தங்கு தடையற்ற ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை - பிரதமர் அலுவலகம்.
* பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்:
ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு கூடுதல் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.
* ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக முடிவெடுக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் - தமிழ்நாடு முதல்வர் அழைப்பு
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,659பேருக்கு கொரோனா உறுதி.
தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,81,988 உயர்வு.
ஒரே நாளில் தமிழகத்தில் 82 பேர் கொரோனாவிற்கு பலி.
* ஆக்சிஜன், டேங்கர்கள் உங்களிடம் இருந்தால் டெல்லி அரசுக்கு தந்து உதவுங்கள்"-தொழிலதிபர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்.
ஆக்சிஜன் தர வேண்டி மாநில முதல்வர்களுக்கு கெஜ்ரிவால் நேற்று கடிதம் எழுதி இருந்தார்.
* நாட்டில் மருத்துவத் தேவைக்கு மட்டுமே ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
தொழிற்சாலைகள் திரவ ஆக்சிஜனை வைத்திருந்தால் உடனடியாக மருத்துவத் தேவைக்கு வழங்க உத்தரவு.
* ஸ்டெர்லைட் நிறுவனம் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்:
“ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக் கக்கூடாது"-உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்.
No comments:
Post a Comment