அக்னிப்புரட்சி இன்றைய (27.04.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.
💥அஞ்சலகங்களில் சேவை நேரம் குறைப்பு!
அடுத்த அறிவிப்பு வரும் வரையில் அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் தமிழக வட்டார அஞ்சல் துறை
💥தில்லியில் இன்று ஒரே நாளில் 380 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு. 20,201 பேருக்கு புதிதாக தொற்று உறுதி.
* கேரளாவில் அடுத்த அறிவிப்பு வரும் வரை மதுக்கடைகளை மூட அரசாணை
* உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்:
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை 4 மாதங்களுக்கு திறக்கலாம் - தமிழக அரசு.
அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்.
ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி பிரிவை மட்டுமே திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கும்.
ஸ்டெர்லைட்டில் நடக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கண்காணிக்கும்.
நாளொன்றுக்கு 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து மருத்துவ பயன்பாட்டுக்கு தருவதாக வேதாந்தா வாக்குறுதி அளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்தால் அது தமிழ்நாட்டின் தேவைக்கு பயன்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மாநிலத்தின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
* கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை
தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சிறப்பு விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது
ரெம்டெசிவர் மருந்து வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு
ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோர் 104 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மருந்து வாங்க என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்?
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடைய (+ve) சான்றிதழ், மருத்துவர் பரிந்துரைக்கும் சீட்டு, நோயாளிகளின் ஆதார் கார்டு மற்றும் நோயாளிகளின் ஸ்கேன் ரிப்போர்ட், வாங்க வருபவர்களின் ஆதார் கார்டு கட்டிப்பாக வேண்டும்.
ஒரு வேயின் 1560 ரூபாய் வீதம் ஒரு நபருக்கு 6 வேயின் வழங்கப்படும்.
* இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரங்களை இந்தியாவுக்கு அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு.
2000 நோயாளிகளுக்கு 5 நாட்களுக்கு தேவையான திரவ ஆக்சிஜன் மற்றும் 28 உயிர்காக்கும் கருவிகளை அனுப்ப குடியரசு தலைவர் இம்மானுவேல் மாக்ரோன் உத்தரவு.
* ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடுசெய்ய பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் வகுக்க உயர்மட்டக் குழு அமைக்கக் கோரி வழக்கு.
12 வாரங்களில் பரிசீலிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.
மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் - நீதிமன்றம்.
* தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகளுக்கு பின், வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பு.
மே 2-ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.
* அழகர் கோயில் வளாகத்தில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு.
குதிரை வாகனத்தில் ஆடி ஆடி செயற்கை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.
* அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
அவசியமாக இருந்தால் மாஸ்க் போடாமல் வெளியே வராதீர்கள்; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்து கொண்டால் கொரோனா பரவல் முழுமையாக குறைய வாய்ப்பு.
ஞாயிறு முழுபொதுமுடக்கத்தால் கொரோனா ஏற்றத்தின் வேகம் சற்றே குறைந்திருக்கிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
* ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது:
ஆக்சிஜன் உற்பத்தியை காரணமாக வைத்துக் கொண்டு ஆலையில் வேறு எந்த அலகையும் இயக்கக் கூடாது - தமிழக அரசு வாதம்.
ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படவுள்ள ஆக்சிஜனை எங்களுக்கு தர வேண்டும்
ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தேவைப்படும் மாநிலங்களுக்கு நாங்கள்தான் பிரித்தளிப்போம் - மத்திய அரசு வாதம்.
* ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.
ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க கோரிய ஸ்டெர்லைட்டின் மனு ஏற்பு.
தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்கிறோம்.
ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்; தாமிர ஆலைக்குள் செல்லக் கூடாது - உச்சநீதிமன்றம்.
ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை இயக்க எவ்வளவு நபர்கள் தேவை என்பதை கண்காணிப்பு குழு முடிவு செய்யட்டும் - உச்சநீதிமன்றம்.
தமிழகத்தை சேர்ந்த 3 சுற்றுச்சூழல் நிபுணர்கள் கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர்.
* ஸ்டெர்லைட் கண்காணிப்பு குழுவில் இடம் பெறவிருப்போர்!
1. மாவட்ட ஆட்சியர்
2. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
3. மாவட்ட சூழலியல் பொறியாளர்
4. சார் ஆட்சியர் மற்றும்
5. துறை சார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள்
* 990 படுக்கை வசதி கொண்ட ஈஷா வித்யா பள்ளி வளாகத்தை கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களாக தமிழக அரசுக்கு வழங்குகிறது ஈஷா...
* 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது
இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
மீண்டும் பயன்படுத்த கூடிய முக மறைப்பை அனைவரும் அணிய வேண்டும் -ஊரக வளர்ச்சி துறை ஆணை
* திண்டுக்கல் : வடமதுரை காவல் நிலையத்தில் 2010-ம் ஆண்டு விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம்.
சார்பு ஆய்வாளர் மற்றும் 2 தலைமை காவலர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு.
* மே 2ஆம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு.
வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது என பரவிய செய்தி தவறானது.
வாக்கு எண்ணிக்கை நாளன்று செய்யப்பட்டுள்ள கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
தலைமைச் செயலாளருடன் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, வாக்கு எண்ணிக்கையின் போது கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தப்பட்டது.
* ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது - திமுக தலைவர் ஸ்டாலின்.
ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்.
திமுக அரசு அமைந்தால், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சீல் வைக்கப்படும் - ஸ்டாலின்.
* பேருந்து நிலைய கழிப்பறை மேற்கூரை இடிந்துவிழுந்து உயிரிழந்த கட்டிட தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரிய வழக்கு.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க பல்லடம் நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கட்டிட தொழிலாளி பலியானதற்கு பல்லடம் நகராட்சியின் கவனக்குறைவே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம்.
மழையின்றி உயிர் வாழ முடியாது என்றாலும், விலைமதிப்பில்லாத ஒரு உயிர் மழையால் பறிபோயுள்ளது - நீதிபதிகள் வேதனை.
💥தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது உறவினர்கள் வன்முறை வெறியாட்டம்
மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலருக்கு பலத்த காயம்
* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 21, 22ல் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு;
தேர்வுகள் நடைபெறும் 25 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் - I.C.A.I.
💥தமிழகத்தில் இன்று புதிதாக 15,830 பேருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி; 77 பேர் உயிரிழப்பு
* நீதிபதிகள் கொரோனா சிகிச்சைக்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 அறைகள்: டெல்லி அரசு ஏற்பாடு.
நீதிபதிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க நட்சத்திர ஹோட்டல்களை நாங்கள் கேட்டோமா- நீதிபதிகள்.
* 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு
* கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் சித்தி உயிரிழப்பு.
பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவருக்கு சிகிச்சை பலன் கொடுக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 80.
No comments:
Post a Comment