பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பயிலரங்கத்தில் கொள்கை வழிகாட்டிகளின் திருவுருவச்சிலைகள்! திறப்பு - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளான தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர், தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.
2007-ஆம் ஆண்டில் சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தந்தைப் பெரியாரின் உருவச்சிலையை அப்போதைய மத்திய இணையமைச்சரும், தந்தைப் பெரியாரின் பெயரனுமான ஈ.வெ.கி.ச. இளங்கோவன், அண்ணல் அம்பேத்கர் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கார்ல் மார்க்ஸ் சிலையை அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.இராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.
நானும், பா.ம.க. இளைஞரணித் தலைவரும், அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தொடர்வண்டித்துறை இணையமைச்சர் அரங்க.வேலு ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் விழாப் பேருரை நிகழ்த்தினோம்.
No comments:
Post a Comment