தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய பெரியவர் ஆனைமுத்து அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல். - Agnipuratchi

தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய பெரியவர் ஆனைமுத்து அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்.

Share This

தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய பெரியவர் ஆனைமுத்து அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்.

பெரம்பலூர் மாவட்டத்தின் முருக்கன்குடியில் 21.06.1925-இல் வேம்பாயி - பூவாயி இணையரின் மூத்த மகனாக பிறந்த ஆனைமுத்து அவர்கள், இளம் வயதிலிருந்து கடுமையான வறுமையையும் பொருட்படுத்தாமல் தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பும் பணியில் ஈடுபட்டார். 1978-ஆம் ஆண்டு முதல் வட மாநிலங்களுக்கு சென்று தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பினார். அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர்,  மதச் சிறுபான்மையினர் பேரவை என்ற அமைப்பை பிகாரில் இராம் அவதேஷ் சிங்குடன் இணைந்து  தொடங்கி, அதன் மூலம் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்து பல இயக்கங்களை நடத்தி வெற்றி பெற்றவர்.

இந்தியாவின் சமூகநீதி வரலாறு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வரலாறு, தந்தை பெரியாரின் வரலாறு ஆகிய எதுவாக இருந்தாலும் பெரியவர் ஆனைமுத்து அய்யா அவர்களின் பெயரையும், பணிகளையும் தவிர்த்து விட்டு எழுத முடியாது. இத்தகைய சமூகநீதி சாதனைகளுக்கு சொந்தக் காரரான பெரியவர் ஆனைமுத்து அய்யா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பெரியாரிய, மார்க்சீய கொள்கைவாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages