அக்னிப்புரட்சி இன்றைய (01.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.05.2021) முக்கிய செய்திகள்.

*;சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.

* மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 கொரோனா நோயாளிகள் பலி:

குஜராத் மாநிலம் பாரூச் என்ற இடத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை மையத்தில் நள்ளிரவில் 12.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீ விபத்தில் பலத்த காயமடைந்த கொரோனா நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளனர்.

* ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்த பாதிப்பு:

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 4 லட்சத்து ஆயிரத்து 993பேருக்கு கொரோனா.

கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 523 பேர் உயிரிழப்பு.

நேற்று ஒரு நாள் மட்டும் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதித்த 32 லட்சத்து 68 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

💥இந்தியா முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவித்திருந்த நிலையில் தமிழகத்தில்  18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கவில்லை

போதிய அளவில் தடுப்பூசி கையிருப்பு இல்லை என சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு

* யானைகள் வழித்தடமான தடாகத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் செங்கல்சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:

கோவை மாவட்ட ஆட்சியருக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

செங்கல்சூளைகளை மூடும்படி உத்தரவிட மாவட்ட ஆட்சியருக்கே அதிகாரம் - நீதிமன்றம்.

தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள சூழ்நிலையில் முக்கிய ஆலோசனை.

வாக்கு எண்ணும் மையங்களில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிகிறார்.

* ஆக்ஸிஜன் பற்றாக்குறை: டில்லியில் 8 பேர் பலி:

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு.

* தலைக்கு மேல் வெள்ளம் போன்ற சூழல் உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி பத்ரா மருத்துவமனையில் இன்று 8 பேர் இறந்த பின்னரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக வழங்க வேண்டும்.

உத்தரவை மீறினால் அவமதிப்பு நடவடிக்கை பாயும் - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

* கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தயாரிப்பு ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுதி ஐதராபாத் வந்தது.

இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து 1.50 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷ்யாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரத்தியேக பெட்டகங்களில் வந்துள்ளன.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா உறுதி.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு 11,86,344.

ஒரே நாளில் தமிழகத்தில் 147 கொரோனாவிற்கு பலி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages