அக்னிப்புரட்சி இன்றைய (03.05.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (03.05.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (03.05.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.43 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.75 க்கும் விற்பனை.

* காங்கிரஸ் வேட்பாளர் மரணத்தால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி.

12 ஆயிரத்து 738 ஓட்டுகள் அதிகம் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றார்.

மான்ராஜ் 70 ஆயிரத்து 475 வாக்குகள் பெற்றிருந்தார்.

உயிரிழந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் 57 ஆயிரத்து 737 ஓட்டுகள் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

* தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி.

ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பினார் எடப்பாடி பழனிசாமி.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் ராஜினாமா.

* ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளதை அடுத்து வாழ்த்து.

ஸ்டாலினுக்கு டுவிட்டரில் வாழ்த்து கூறினார் எடப்பாடி பழனிசாமி.

சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் 118 இடங்களுக்கு மேல் வென்று ஆட்சியமைக்கிறது திமுக.

* புதுச்சேரி முதல்வராக வரும் 7ம் தேதி பதவியேற்கிறார் ரங்கசாமி.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.

* மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின்

மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை.

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம்; அத்தகைய ஜனநாயகம் காப்போம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் ராஜினாமா.

ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளர் மற்றும் சட்டத்துறை செயலாளருக்கு அனுப்பினார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து ராஜினாமா.

* மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்-பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4.5.2021 செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.

அப்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

* நிர்வாகம் என்ற நாணயத்தின் மறுபக்கம் எதிக்கட்சி - அதிமுக.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை.

10 ஆண்டுகள் அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள்.

நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி.

ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும்.

* முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் உடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்திப்பு.

காவல்துறை டி.ஜி.பி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சந்திப்பு.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார்.

* இன்று நடைபெற இருந்த பெங்களூரு - கொல்கத்தா இடையேயான ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு.

கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று.

கொல்கத்தா வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா.

வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் போட்டி ஒத்திவைப்பு.

போட்டி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு.

* புதுச்சேரியில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு.

* என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு.

நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்.பி ஆகியோர் ரங்கசாமியுடன் ஆலோசனை.

சுமார் 15 நிமிட சந்திப்பின்போது அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவது என்பது குறித்து ஆலோசனை.

கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை என தகவல்.

* புதுச்சேரி மாநில முதல்வராக வெள்ளி அல்லது ஞாயிறு அன்று ரங்கசாமி பதவி ஏற்பார் என தகவல்.

ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வென்றது.

* தமிழக அரசின் ஆலோசகர் பதவியை முன்னாள் தலைமை செயலாளர்  சண்முகம் ராஜினாமா செய்தார்.

ராஜினாமா கடிதத்தை  தலைமை செயலாளர்  ராஜீவ் ரஞ்சனுக்குக்கு அனுப்பினார்.

* புதுச்சேரியில் ஆட்சியமைக்க, துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரினார் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி.

ஆட்சி அமைக்க உரிமை கோரி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்குகினார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங். கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

சட்டமன்ற கட்சி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை என்னிடம் வழங்கினார்.

பதவியேற்பு விழா நடத்த நேரம் கேட்கும் போது விழா நடத்தப்படும் - ஆளுநர் தமிழிசை.

* தமிழகத்தில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்:

1), தியாகராயநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணனை 137 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்,

2. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரஸ்வதி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

3. தென்காசி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தான் பாண்டியனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

4. மேட்டூர் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சதாசிவம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீநிவாச பெருமாளை 656 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

5. காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைமுருகன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் வி ராமுவை 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

6. கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் அசோக்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவனை 794 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

7. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கார்த்திகேயனை 862 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

8. நெய்வேலி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜெகனை 977 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

9.ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தேவராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கேசி வீரமணியை 1091 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

10.கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தாமேதரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் குறிஞ்சி பிரபாகரனை 1095 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

* வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் கூட்டம்.

* திமுக ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறைகளை காலி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய பொருட்கள், பெயர் பலகைகள் அகற்றப்பட்டு வருகிறது.

* தமிழகத்தில் இன்று 20,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 28 ஆயிரத்து 064 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 6,150 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் தற்போது 1,23,258 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 18,016 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது.

* முடிவுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்:

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

* சட்டமன்றத்தில் கட்சிகளின் பலம்;

திமுக கூட்டணி:

திமுக - 125,

காங்கிரஸ் - 18,

மதிமுக-4,

விடுதலை சிறுத்தைகள் - 4

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2,

இந்திய கம்யூனிஸ்ட் -2

தமிழக வாழ்வுரிமை-1,

மனிதநேய மக்கள் கட்சி-2

கொங்குநாடு மக்கள்
தேசிய கட்சி -1

* அதிமுக கூட்டணி:

அதிமுக- 66,

பாமக - 5,

பாரதிய ஜனதா - 4,

தேர்தல் ஆணைய தகவல்களின்படி திமுக 37.7% வாக்குகளையும், அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பிற கட்சிகளின் வாக்கு விழுக்காடு விபரம்: காங்கிரஸ் 4.27%, பாமக 3.80%, பாஜக 2.62%, தேமுதிக 0.43%, சிபிஐ 1.09%, சிபிஎம் 0.85%, ஐ.யு.எம்.எல் 0.48%.

* கொரனா பரவலை கட்டுப்படுத்த மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

மே 20ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages