அக்னிப்புரட்சி இன்றைய (04.05.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.55 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
* பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர் - மு.க.ஸ்டாலின்.
செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்.
முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் அறிவிப்பு.
முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில் வழங்கப்படும் - ஸ்டாலின்.
* தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அறிவிப்பு.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை நடவடிக்கை.
15 ஆயிரம் ஊதியம் பெற்றவர்கள் இனி 40 ஆயிரம் வரை ஊதியம் பெறுவார்கள் என தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.
* ரெம்டெசிவிர் மருந்து 8 பெட்டிகள் திருட்டு.
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து கொள்ளை.
மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை.
அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறை ஆய்வு.
அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையா?
8 மருந்து பெட்டிகள் காணவில்லை என மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார்.
* தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு.
சென்னையை சேர்ந்த பாலாஜி ராம் என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
* கொரோனா தடுப்பு பணி - முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலின் மீண்டும் முக்கிய ஆலோசனை.
தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை.
* தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் வானிலை மையம் தகவல்.
ஐதராபாத் அணி வீரர் விரித்திமான் சாஹாவுக்கு கொரோனா தொற்று உறுதி
* கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தம்.
2021 ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம். வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் போட்டிகள் நிறுத்தம்.
தேதி அறிவிக்கப்படாமல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
* சென்னையில் உள்ள அம்மா உணவகத்திற்குள் புகுந்த திமுக வை சேர்ந்த சிலர், அங்கிருந்த அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை பிடுங்கி, நடுரோட்டில் எறிந்து உடைத்து போட்டனர்.
பின்னர் இனி அம்மா உணவகம் என்ற பெயரெல்லாம் கிடையாது என்று ஆவேசமாக கூறியபடி சென்றனர்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
* மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு திமுக வினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் திமுக தலைவர் உடனடியாக உத்தரவிட்டார்...
* சென்னை மதுரவாயலில் அம்மா உணவக பெயர் பலகை அகற்றப்பட்ட விவகாரத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நவசுந்தர், சுரேந்திரன் உள்ளிட்ட மூவர் மீது 3 பிரிவுகளில் போலீஸ் வழக்கு - இருவர் கைது; தலைமறைவான ஒருவருக்கு வலைவீச்சு.
* திமுக வெற்றி பெற்றதற்காக காணிக்கையாக நாக்கை துண்டித்த பெண் தொண்டர்; செய்தியை கேட்டவுடன் நடுக்க முற்றேன்- திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம்.
வெற்றிக்காணிக்கை என்ற பெயரில் தங்களது உடலுக்கு ஊறுவிளைவித்துக் கொள்ள வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். திமுக பெண் தொண்டர் ஒருவர் நாக்கை அறுத்து கோயில் உண்டியலில் போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றியுள்ளார். திமுக தொண்டர்கள் துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
* ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா-மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிப்பு.
சிங்கங்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதி.
* ஜே.இ.இ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர்.
ஏப்ரல் மாத தேர்வு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே மாத தேர்வும் ஒத்திவைப்பு.
* தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை காலைலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார்.
7ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
பதவி ஏற்பு விழாவில் ஒவ்வொரு அமைச்சருக்கும் 8 முதல் 10 பாஸ் மட்டுமே வழங்கப்பட்டு மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு மின்பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமைச் செயலர் பிப்ரவரி 25 ம் தேதி அரசாணை எண் 29 ஐ பிறப்பித்தார்.
அதன்படி ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதை தொடந்து தற்போது இவர்களுக்கும் உயர்வு.
* கொரோனா நோய் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை கவனமாக கடைபிடிக்க வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
முதல் அலையை விட கொரோனா 2வது அலை மிக மோசமாக பரவதால், உயிரிழப்பும் அதிகரிக்கிறது.
வடமாநிலங்களைப் போன்ற நிலை தமிழகத்திற்கும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
* ஆஸ்ட்ரிச் பறவை போல உங்கள் தலையை நீங்கள் மணலில் புதைத்துக் கொள்ளலாம் எங்களால் முடியாது - ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த வழக்கு விசாரணையில் மத்திய அரசை விளாசிய டெல்லி உயர் நீதிமன்றம்.
என்ன ஆனாலும் சரி, டெல்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை சப்ளை செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.
* திமுக சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு.
புதன்கிழமை தமிழக ஆளுநரைச் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்.
வெள்ளிக்கிழமை காலை தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். ஆளுநர் மாளிகையில் எளிமையாக விழா நடைபெறும் என தகவல்.
* தமிழகத்தில் மேலும் 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு 12,49,292 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 19,112 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் மொத்தம் 11,09,450 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,612 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் 89 பேரும், தனியார் மருத்துவமனையில் 48 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 6228 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மொத்தம் 358573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2,32,38,475 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 1,40,512 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 1,25,230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 7,53,945 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 12,450 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,95,309 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 8,778 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 266 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 197.
💥சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்:
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
💥தமிழகத்தில் புதிதாக 21228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 144 பேர் உயிரிழப்பு.
* நாளை காலை 10 மணி அளவில், தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தினை அளிக்கிறார் முக ஸ்டாலின். ஆட்சி அமைக்கும் உரிமை கோருகிறார்
* கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் கொரோனா சோதனை செய்வது தொடர்பாக புதிய வழிமுறைகளை ICMR வெளியிட்டுள்ளது.
💥பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மராத்தா இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகள் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு அளிக்கிறது.
No comments:
Post a Comment